திருவாரூர் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட்சியர் ஆய்வு
திருவாரூர், அக்.25 - திருவாரூர் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் வெள்ளி யன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் தெரி விக்கையில், “திருவாரூர் மாவட்டத்தில், குறுவை அறுவடை 80 சதவீதம் முடிந்து விட்டது. ஏறக்குறைய 1 லட்சத்து 96 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வியாழனன்று 10,000 மெ.டன் நெல் 5 ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளியன்று மன்னார்குடி பகுதியில், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப் பூண்டி ஆகிய 3 ரயில் பகுதியிலிருந்து 6 ஆயிரம் மெ.டன் நெல் அனுப்பி வைக்கப் பட்டு வருகிறது. மேலும், 154 லாரிகளில் ஏறத்தாழ 100 லாரிகள் வந்துள்ளன. 50 லாரிகள் வந்து கொண்டிருக்கின்றன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்க ளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் முறை யாக பாதுகாக்கப்பட்டு, போர்க்கால அடிப்ப டையில் நாள் ஒன்றுக்கு 8000 முதல் 10000 மெ.டன் வரை இயக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் சரவ ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உள்ளிட்ட அரசு அலு வலர்கள், செய்தியாளர்கள் கலந்து கொண்ட னர்.
