tamilnadu

img

போக்குவரத்துத் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்குடன் செயல்படும் நிர்வாக இயக்குநர்

மதுரை, ஜூலை 6-   போக்குவரத்துத்தொழிலாளர் களை பழிவாங்கும் நோக்குடன் செயல் படும் நிர்வாக இயக்குநரைக் கண்டித்து ஜூன் 6 அன்று சிஐடியு சார்பில் மதுரை யில் பெருந்திரள்  போராட்டம் நடை பெற்றது. ஓட்டுநர், நடத்துனர்கள் வார ஓய்வை ரத்து செய்து, அதிக நேரம் பணி  பார்த்தால் தான் விடுப்பு வழங்கப்படும் என்ற நிபந்தனையை கைவிட்டு. தேவையானவர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும். மண்டலங்களில் உள்ள கிளைகளுக்கு இடம் மாறுதல் செய்யும் அதிகாரம் அந்தந்த பொது மேலாளருக்கு வழங்க வேண்டும். இட மாறுதல் விடுப்பு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் லஞ்ச ஊழல் நடவடிக்கைகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்.  ஜன நாயக முறையில் போராட்டங்கள் நடத்திய தொழிற்சங்க தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடு படுவதை கைவிட வேண்டும்.  தரமான உதிரி பாகங்களை போக்குவரத்து கழ கங்களுக்கு வழங்கிடவேண்டும். மதுரைக் கழகத்தில் தொழிற்சங்கங் களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த சரத்துகள் தொடர்ந்து மீறப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி மதுரை, திண்டுக்கல், விருது நகர் ஆகிய மண்டலங்களைச் சார்ந்த  அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம்  (சிஐடியு) சார்பில் ஜூன் 6 அன்று பெருந்திரள் முறையீடு போராட்டம் மதுரை அரசு போக்குவரத்து தலைமை யகம் முன்பு நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மாநிலப் பொதுச் செயலாளர் கே. ஆறுமுக நயி னார் தலைமை வகித்தார்.  சம்மேளன துணைத் தலைவர் வி. பிச்சை  மதுரை மண்டல தலைவர் பி. எம். அழகர்சாமி, பொதுச்செயலாளர் ஏ. கனக சுந்தர், பொருளாளர் டி. மாரியப்பன், திண்டு க்கல் மண்டல தலைவர் ஐ. ஜெயக் குமார், பொதுச்செயலாளர் என். ராம நாதன், பொருளாளர் எஸ். ஜோசப் அரு ளானந்தம், விருதுநகர் தலைவர் எஸ். சுந்தரராஜ் ,பொதுச் செயலாளர் எம். வெள்ளத்துரை பொருளாளர் எம். கார்மேகம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் எஸ். அழகர், பொதுச் செயலாளர் ஆர். வாசுதேவன், பொருளாளர் ஆர். ரவி உள்பட மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்  பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார்  செய்தியாளர்களிடம் கூறுகை யில், போக்குவரத்து தொழிலாளர் களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகிறது, ஏற் கனவே இருக்கும் ஒப்பந்தப்படி சீருடை கூட தற்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை

இது சம்பந்தமாக நிர்வாக இயக்குநரிடம் முறையிட்டால், அதற்கு மாறாக நிர்வாக இயக்குனர் தொழிலாளர்களிடம் பழிவாங்கும் நோக்குடன் செயல்படுகிறார். மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மூன்று மண்டலங்களின் நிர்வாகத்தை நிர்வாக இயக்குனரே கையில் வைத்துக் கொண்டு பொது மேலாளர்களை பேச அனுமதிப்பதில்லை அதே போல் இந்த மூன்று மண்டலங்களிலும் லஞ்சம் அதிக அளவில் வாங்கப்படுகிறது ஒரு தொழிலாளி இடமாறுதல் செய்ய வேண்டும் என்றால் லஞ்சம் கொடுத்தால் தான் இடமாறுதல் செய்யப்படும் என்ற போக்கு அதிகரித்துள்ளது .இதன் கார ணமாக போக்குவரத்து நிர்வாகம் மிகப் பெரும் சீர்கேட்டை சந்தித்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். தொழிலாளர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மூன்று மண்டலங் களில் உள்ள பொது மேலாளர்கள் பிரச்ச னைகளை பேசி தீர்ப்பதற்கான உத்தர வை நிர்வாக இயக்குநருக்கு அளித்திட வேண்டும். அதேபோல் தொழிலாளி களுக்கான சீருடை மற்றும் சட்டப்படி யான பலன்கள் உடனடியாக வழங் கிட வேண்டும். லஞ்ச ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார்.

;