கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா?
சின்னாளபட்டி, மே 15- திண்டுக்கல் மாவட்டம் ஆத் தூர் தாலுகாவிற்கு உட்பட்ட சின் னாளபட்டி அருகே போக்கு வரத்து நகர் பகுதியில் குடி யிருக்கும் 41 வயதான கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆலமரத்துப்பட்டி பகுதி யைச் சேர்ந்த போக்குவரத்து நகர் பகுதியில் வசிக்கும் சிவா என்ப வரின் மனைவி விஜி. இவர் மது ரையில் உள்ள அப்பல்லோ தனி யார் மருத்துவமனைக்கு பிரச வத்திற்காக தொடர் மருத்துவ பரி சோதனைக்கு சென்றிருந்த போது, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள் ளது. இதனையடுத்து திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ குழுவினர் போக்கு வரத்து நகர் பகுதியில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கர்ப்பிணி பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர். இத னையடுத்து ஆலமரத்துப்பட்டி மற்றும் போக்குவரத்து நகர் பகுதி களை சின்னாளபட்டி போலீசார், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் முகாமிட்டு தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பெண் பழகிய பக்கத்து வீடு உறவி னர்களுக்கும் தொற்று இருக்குமா எனக் கருதி ஆய்வு செய்து வரு கின்றனர். இது ஒருபுறம் இருக்க, தமிழக அரசு மே 18 ஆம் தேதி பேருந்து களை இயக்குவதாக அறிவித் துள்ளது. திண்டுக்கல் மண்ட லத்தில் 3 கிளைகள் உள்ளன. இந்தக் கிளைகளில் பணிபுரியும் ஓட்டுநர்-நடத்துநர்கள், பெரும் பாலும் இந்த கொரோனோ தொற்று ஏற்பட்ட போக்குவரத்து நகரில் வசித்து வருவதால் நிர்வா கம் சீல் வைத்தால், எப்படி வேலை க்கு செல்வது என ஓட்டுநர், நடத்து நர்களும், அவர்களது குடும்பத்தி னரும் திகைத்து நிற்கின்றனர்.
புதிதாக பணியில் சேர்ந்த காவலருக்கு கொரோனா தொற்று
விருதுநகர், மே 15- இராஜபாளையம் அருகே உள்ள மொட்டமலை பட்டாலி யனில் புதிதாக பணியில் சேர்ந்த காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது. விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் அருகே உள்ளது மொட்டமலை. இங்குள்ள பயிற்சி மையத்தில் 440 பேர் காவலராக பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு பயிற்சி யில் இருந்த 24 வயது காவலர் ஒரு வருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியா னது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் அனுப்பி வைத்த னர். இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது.
அர்ச்சகர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
திருவில்லிபுத்தூர், மே 15- ஆண்டாள் கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள திருக் கோவில்களில் பணிபுரியும் அர்ச்ச கர்கள் திருக்கோவில்கள் மூடப் பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத் தையா அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களை ஆண்டாள் திருக் கோவில் அர்ச்சகர் முத்து பட்டர் தலைமையில் வழங்கினார். நிகழ்ச்சியில் நிலவள வங்கி தலைவர் முத்தையா, தைலா குளம் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து திரும்பிய மருத்துவருக்கு உற்சாக வரவேற்பு
திருநெல்வேலி, மே 15- பாவூர்சத்திரம் அருகே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து திரும்பிய மருத்துவருக்கு கைத்தட்டி உற் சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் பொடிய னூரை சேர்ந்தவர் மரு.ரீட்டா ஹெப்சி ராணி. இவர் பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியை யாக பணியாற்றி வருகிறார். தற்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் இவர் கடந்த மார்ச் மாதம் 30 முதல் மே 6 வரை 35 நாட்கள் பணியாற்றினார். பின்னர் மே 6 முதல் தனிமைப்படுத்தப்பட்டு அவர் சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு அவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், வணிகர்கள், உற வினர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவருக்கு சந்தன மாலை, சால்வை அணி வித்து கைதட்டி உற்சாகப்படுத்தி வரவேற்ற னர். நிகழ்ச்சியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்லப்பா, டாக்டர் ஜான் செல் லையா, மக்கள் நல கமிட்டியை சேர்ந்த ராமர், ஓய்வுபெற்ற ஆசிரியர் தாமோ தரன், ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் தங்கராஜ், சண்முகநாதன் மற்றும் உறவினர்கள், ஆசிரியைகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.