சென்னை, ஜூலை 10- தமிழ்நாட்டில் 2024-25 ஆம் கல்வியாண்டில் பொறி யியல் படிப்புகளில் சேரு வதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதியுடன் நிறைவு பெற் றது. பின்னர், மேலும் அவ காசம் கேட்டு வந்த கோரிக் கைகளின் அடிப்படையில், கடந்த மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் விண் ணப்பப் பதிவு செய்ய அறி வுறுத்தப்பட்டது. அதன்படி, விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்ற நிலை யில், 2 லட்சத்து 53 ஆயி ரத்து 954 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்ததாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அலு வலகம் தெரிவித்தது. விண்ணப்பப் பதிவு செய்தவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண் ணப்பக் கட்டணத்தை செலுத் தியும், அவர்களில் ஒரு லட் சத்து 93 ஆயிரத்து 853 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருந்தனர். இந்த நிலையில் விண் ணப்பக் கட்டணம் செலுத்தி யவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண்ணும் கடந்த மாதம் 12 ஆம் தேதி வெளி யிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 13 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களுக் கான சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணைப்படி, விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர் களுக்கான தரவரிசைப் பட்டி யல் புதனன்று (ஜூலை 10) வெளியானது. தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக் கக ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்டார். தர வரிசைப் பட்டியல் tnea online.org என்ற இணை யதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. தரவரிசை பட்டி யலில் செங்கல்பட்டை சேர்ந்த மாணவி தோஷிதா லட்சுமி முதலிடம் பெற்றுள் ளார். நெல்லையை சேர்ந்த மாணவி நிரஞ்சனா 2-வது இடம் பெற்றுள்ளார். முதல் 2 இடங்களை மாணவிகள் பெற்ற நிலையில் நாமக் கலைச் சேர்ந்த கோகுல் என்ற மாணவன் 3-வது இடம் பெற்றுள்ளார். வரும் 22 ஆம் தேதி பொறியியல் கலந் தாய்வு தொடங்குகிறது.