tamilnadu

img

புவிசார் குறியீட்டுக்கு முயற்சிக்கும் சாத்தூர் காராச்சேவு

மதுரை என்றால் மல்லிகைப் பூ, கோவில்பட்டி என்றால் கடலை மிட்டாய், திருநெல்வேலி என்றால் அல்வா. இவை தான் நம் நினைவுக்கு வரும். இந்தப் பட்டியலில் மட்டுமல்ல புவிசார் குறியீடு பெறுவதற்குமான முயற்சிகளையும் மேற் கொண்டிருக்கிறது விருதுநகர் மாவட்டத்தி லுள்ள சாத்தூர். புவிசார் குறியீடு பெறுமளவிற்கு அப்படி யென்ன சிறப்பம்சம் உள்ளது சாத்தூருக்கு. ஒரு காலத்தில் பேனா நிப்பு தொழிலில் புகழ் பெற்றது இந்த ஊர். மிஞ்சிப் போனால் தீப்பெட்டி உற்பத்தி, சில பகுதிகளில் பட்டாசு உற்பத்தி, அவ்வளவு தான் என நினைப்பவர்க ளின் புருவத்தை உயர்த்துகிறது சாத்தூர் காராச்சேவு. காராச்சேவு தமிழகத்தின் உணவுப் பழக்கங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது.  டீ கடைகளுக்கு செல்பவர்களில் பலர் காராச் சேவு பொட்டலம் வாங்கி டீயோடு சேர்த்து உண்பதை பார்க்கலாம். காராச்சேவை ஒரு  கடி கடித்துக்கொண்டே தேநீரை உறிஞ்சி னால் தேநீரின் சுவை அதிகமாக இருக்கும் என்கின்றனர்.

சரி விஷயத்திற்கு வருவோம்.

1910- ஆம் ஆண்டு வாக்கில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் குஜராத்தி சிற்றுண்டி யாக இருந்த சேவை தமிழகத்தில் தயாரித்தால் என்ன என யோசித்தார். அதைச் சாதித்தும் காட்டினார். அவர் சாத்தூரைச் சேர்ந்த சண்முக நாதன். விருதுநகர் மாவட்டத்தில் அந்தக் காலத்தில் கடலை மிட்டாயும்,  நன்னாரி சர் பத்தும் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதோடு காராச்சேவும் சேர்ந்துள்ளது. குஜராத்தில் கொண்டைக்கடலை மாவுடன் சிறிது உப்பு சேர்த்து சேவு தயாரிக்கப்பட்டுள் ளது. இதை சற்று வித்தியாசமாக (தமிழர்கள் விரும்பும் காரத்தோடு) கொடுத்தால் என்ன வென்று யோசித்துள்ளார் சண்முகநாதன். இதற்காக அவர் சாத்தூரை சுற்றிலும் விளைவிக்கப்பட்ட  சூடான சிவப்பு மிள காயை  கொண்டைக்கடலை மாவுடன் சேர்த் துள்ளார். அதோடு மலைப்பூண்டையும் சேர்த்துள்ளார்.

காராச்சேவை தயாரித்து அதன் சுவையை அறிந்த சண்முகநாதனுக்கு கிடைத்தது வெற்றி. இதைத் தொடர்ந்து 1914-ஆம் ஆண்டு  தமது  எம்.எஸ். சண்முகநாதர் மிட்டாய் கடை யில் காரச் சேவையும் விற்பனைக்கு வைத்தார். தொடர்ந்து சாத்தூரைச் சுற்றியுள்ள பகுதிக ளில் உள்ள கடைகளுக்கும் காராச்சேவு தயாரித்து அனுப்பினார். காராச்சேவின் தொடக்கம் எம்.எஸ். சண்முகநாதர் மிட்டாய் கடை. தொடர்ந்து அவர்  இப்போது ஸ்ரீ சண்முகா விலாஸ் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி மற்றும் லாலா ஸ்வீட் போன்ற பெயர்களிலும் கடை வைத்துள்ளார். இப்பகுதியில் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் சாத்தூரை கிட்டத்தட்ட இரண்டாகப் பிரிக்கும் தேசிய நெடுஞ்சாலை யில் செல்ல வேண்டும். பேருந்து நகரின் எல்லையை அடைந்தவுடன், சாலையின் இரு புறமும் உள்ள கடைகளில் வெளிர் மஞ்சள் நிறம், சிவப்பு நிறங்களில் காராச்சேவை பிரமீடு கள் போல் வைத்துள்ளனர். ஒரு சில நிமி டங்கள் மட்டுமே நிற்கும் பேருந்துகளிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கி காராச்சேவை வாங்கி வரும் பயணிகள் ஏராளம்.

அந்த இரண்டு நிமிடத்திற்குள் பிரமீடு போல் அடுக்கி வைத்திருக்கும் காராச்சேவு குவியலிலிருந்து பிரமீடு தோற்றம் சாய்ந்துவிடாமல் லாவகமாக எடுத்துத் தரும் கடைக்காரரின் லாவகமே தனி அழகு. இது குறித்து சாத்தூர் பிள்ளையார் கோவில் தெருவில் எம்.எஸ்.சண்முகநாதர் மிட்டாய் கடையை நடத்தி வரும் ஆறுமுக சாமி கூறுகையில், காராச்சேவு தற்போது மக்க ளின் உணவோடு இரண்டறக் கலந்து விட்டது. இந்த காராச் சேவைக் கடித்தால், காபி அல்லது டீயின் சுவை கூட அதிகரிக்கும்.

பிறந்த நாள், திருமணச் சீர்வரிசை, வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளில் காராச் சேவுக்கு நிச்சயம் இடமுண்டு. தயிர்சாதத் தோடு காராச்சேவை சேர்த்துக்கொண்டால் கூடுதல் சாதம் சாப்பிடலாம். இதில் மிளகு கலந்த காராச்சேவின் ருசியே அலாதியானது. மேலும் காராச்சேவு குறித்துப் பேசிய 50 வயதான சண்முகநாதன். ஜெர்மனியில் உள்ள ஆச்சனில் பொறியியல் முதுகலை பட்டம் பெற்ற நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவர். இவர் தற்போது, தந்தை ஆறுமுக சாமி, மாமா மற்றும் உறவினர்களுடன்  சேர்ந்து  காராச்சேவு தயாரிக்கிறார்.  ஜெர்மனியின் ஆச்சன் நகரம் மிட்டாய் உற்பத்தியின் தாயகம் என்பது குறிப்பிடத்தக்கது. சண்முகநாதன், காராச்சேவை ஆன் லைன் வர்த்தகத்திற்கு கொண்டு சென்றுள் ளார். தயாரிக்கப்படும் காராச்சேவு குறைந்தது நான்கு மாதங்களாவது சுவை மாறாமல் அப்படியே இருக்க வேண்டும். மேலும் பேக்கிங் கவர்ச்சியாக இருக்க வேண்டு மென்று விரும்பி அதற்கேற்றார் போல் பேக்கிங் செய்கிறார். ஆன்லைன் வர்த்தகத்திலும் சாத்தூர் காராச்சேவு சக்கைப் போடு போடு கிறது. காராச்சேவு வேண்டுமென  அமெரிக்கா விலிருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. தவிர மலேசியா, கத்தார், குவைத், சவூதி அரேபியா, இங்கிலாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்கும் நம்நாட்டில் ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கும் சாத்தூர் சேவு அனுப்பப்படுகிறது.

அனைத்து தயாரிப்புகளும் இயந்திர மயமாக்கப்பட்டாலும், காராச்சேவு உற்பத்தி  மனித உழைப்பை மட்டுமே நம்பியுள்ளது. காராச்சேவிற்கு தேவை சுவையும் மொறுமொ றுப்பும் தான். அதற்கு உத்தரவாதம் அளிக்கி றோம் என்றார் சண்முகநாதன்.  இவரிடம் சுமார்  60 தொழிலாளர்கள் ஷிப்டு  முறையில் ஒரு மாதத்தில் குறைந்தது ஐந்து டன் காராச்சேவை உற்பத்தி செய்கின்றனர். மொத்தச் சந்தையில் ஒரு கிலோ ரூ.300-க்கு விற்கப்படுகிறது. சேவு தயாரிப்பிற்கு கியாஸ், விறகு அடுப்பு களை பயன்படுத்துவதில்லை. தீப்பெட்டி ஆலைகளில் கிடக்கும் குச்சிகளின் கழிவு களைப் பயன்படுத்துகின்றனர். மெல்லிய மரக்குச்சிகள் காராச்சேவை சரியான வெப்ப நிலையில்  வேகவைக்கின்றன.

இன்றைக்கு சாத்தூரில் பல குடும்பங்க ளின் வாழ்வாதாரத்தை தாங்கி நிற்கிறது சாத்தூர் காராச்சேவு. சாத்தூர் காராச் சேவிற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கூறும்  சண்முகநாதன், நபார்டு வங்கி எங்களுக்கு உதவி செய்கிறது.  சாத்தூரைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் இருந்து பல உற்பத்தியாளர்கள் காராச் சேவ் தயாரித்து சாத்தூர்  காராச் சேவு என்கின்றனர். இருப்பினும் “சாத்தூர்” என்ற அடையாளத்தை இழக்க விரும்ப வில்லை. சாத்தூரில் உள்ள அனைத்து உற் பத்தியாளர்களையும் ஒரு சங்கத்தின் கீழ் கொண்டு வருவதிலும் முனைப்புக்காட்டி வருகிறோம் என்றார்.

“கடலை மாவு, பூண்டு, மிளகு, சீரகம், பெருங்காயம், மிளகாய் வத்தல், கடலை எண் ணெய் ஆகியவற்றை கொண்டு காராச்சேவு தயாரிக்கப்படுகிறது. 100 முதல் 180 டிகிரி வெப்பத்தில் கடலை எண்ணெய்யில் வேக வைக்கப்படுகிறது. சாதாரண நாட்களில் 800 கிலோவும், விசேஷ நாட்களில் 1,500 கிலோவும் விற்பனையாகிறது’ என்கிறார் மூன்று தலைமுறையாக காராச்சேவு தயாரித்து, விற்பனை செய்து வரும் செந்தில் குமார். ஸ்ரீ சண்முகா விலாஸ் ஸ்வீட்ஸ் -பேக்க ரியை நடத்தி வரும் குடும்பத்தின் நான்கா வது தலைமுறையைச் சேர்ந்த டி.கங்காதரன் கூறுகையில், ‘சாத்தூரை காரத் தயாரிப்புக ளின் நகராக மாற்ற வேண்டும். திருநெல்வேலி அல்வாவிற்கும், கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கும் பெயர் பெற்றது போல. சாத்தூர் என்ற பெயரும் அனைவர் மனதிலும் நிலைக்கச் செய்வோம் என்றார்.
 

;