திருவள்ளூர்,நவ.9- நாடாளுமன்றத் தேர்தலில் பணப்பட்டு வாடா நடைபெற்றதா என்பதை அறிய பாஜக நிர்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சனிக்கிழமையன்று சோதனையில் ஈடு பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த வர் கே.ஆர்.வெங்கடேசன். இவர் பா.ஜ.க ஓபிசி அணியின் மாநிலச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் ஆவடி மாநகர காவல் துறையின் மத்திய குற்ற பிரிவு போலீசார் கே.ஆர்.வெங்கடேசன் வீட்டில் சனிக் கிழமையன்று திடீர் சோதனை நடத்தினர். 2023 ஆம் ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டில் நில மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் வழக்கு பதிவு செய் யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வரு கின்றன. இதில் பல்வேறு இடங்களில் நடை பெறும் சோதனை யின் ஒரு பகுதி யாக பா.ஜ.க நிர் வாகி வீட்டிலும் சோதனை நடத்தி யுள்ளனர். பல்வேறு ஆவ ணங்களை அப் போது மத்திய குற்ற பிரிவு போலீ சார் ஆய்வுசெய் ததாக கூறப்படு கிறது. ஏற்கனவே கடந்தாண்டு வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பாஜ.க நிர்வாகி வீட்டில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போதும் பணப்பட்டுவாடா ஏதேனும் நடைபெற்றதா? என்பதற்காக சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.