tamilnadu

கேட் நுழைவுத் தேர்வு நாளை நிறைவு

சேலம்,பிப்.11- நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி.  உள்பட ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இருக்கும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்.,  எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை  பட்டப் படிப்புகளில் சேருவ தற்கான நுழைவு தேர்வு 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி.  உள்பட ஒன்றிய அரசின் உயர்  கல்வி நிறுவனங்களில் இருக்கும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு என்று அழைக்கப்படும்  கேட் என்கிற நுழைவுத்தேர்வு  கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கேட் நுழைவுத் தேர்வை சென்னை, தில்லி உள்ளிட்ட 7 ஐ.ஐ.டி. நிறு வனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும்.  அந்த வகையில்  இந்த ஆண்டு கேட் நுழைவுத் தேர்வை ஐ.ஐ.டி. காரக்பூர் நடத்துகிறது. நடப்பு   கல்வியாண்டுக்கான கேட்  நுழைவுத்தேர்வுக்கு இளங்கலை, முதுநிலை படித்தவர்கள் விண்ணப்பித்தனர்.  இந்த எழுத்துத் தேர்வு  சென்னை உள்பட தமிழகம் முழு வதும் 17  மாவட்டங்களில் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. பிப்ர வரி 13ஆம் தேதி எழுத்துத் தேர்வு முடிவடை கிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள  தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு  எழுதி வருகிறார்கள்.