மதுரையில் சு.வெங்கடேசன் எம்.பி., தலைமையில் பிரச்சாரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும், தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், மதுரை மாநகராட்சி மதுரையில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரியும் மேற்கு -1ஆம் பகுதி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார நடைபயணம் புதனன்று பாலு படிப்பகம் அருகில் துவங்கியது. பகுதிக்குழு உறுப்பினர் வி. மணிகண்டன் தலைமை வகித்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். மாநில குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.லெனின், வை.ஸ்டாலின், பகுதிச் செயலாளர் பி.வீரமணி, போக்குவரத்து இடைக்கமிட்டி செயலாளர் எஸ். அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.