tamilnadu

img

கற்றுக் கொண்டு கற்றுக் கொடுத்து மாற்றிக் காட்டினார் பிஎஸ்ஆர்

இன்று ஒரு வெளிமாநிலத்திற்கு நாம் பயணப்பட திட்டமிடும் போதே அந்த பகுதியின் விவரங்கள், எதெல்லாம் அங்கு பிரபலமான இடங்கள், அப்பகுதியின் மொழியில் உள்ள சில இலகுவான பயன்பாட்டு வார்த்தைகள், உடை, உணவு, கலாச்சாரம் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு அதற்கேற்ப நமது பயண திட்டத்தை தீர்மானிக்கிறோம்…அறிவியல் வளர்ச்சி நமக்கு பேருதவி செய்கிறது... தகவமைத்து கொள்கிறோம். 

ஆனால் தான் சார்ந்திருக்கும் கட்சி யை உருவாக்க, கட்டமைக்க, விரிவு படுத்த, 70 ஆண்டுகளுக்கு முன்னால் மொழி தெரியாத ஒரு பகுதிக்கு வந்தி றங்கி சரித்திரமாகி போன ஒருவரை பற்றி  நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?  மேல இருக்கறவன் பாத்துக்குவான், கை விட மாட்டான், மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான் என நம்பும் மக்கள்  கூட்டம், நமக்கு விதிச்சது அவ்வளவு தான், யாரு வந்து என்ன செய்ய முடியும்  என நொந்து போய் வாழ்வின் அனைத்து  துயரங்களுக்கும் வேறு ஏதோ ஒன்று காரணம் என நினைத்து கொண்டிருந்த அப்பாவி மக்கள் மத்தியில் நமக்கான மாற்றத்தை நாமே உருவாக்க முடியும், அது நம் காலத்திலேயே சாத்தியம் என  சாதித்து காட்டிய ஒருவர் சம காலத்தில்  வாழ்ந்து மறைந்துள்ளார்... அவர் யாரென தெரிந்து கொள்ள வேண்டாமா?  ஒரேயொரு மனிதன் அனைத்து சாக சங்களையும் செய்து மக்களை துன்பங்  களிலிருந்து காப்பாற்றியவர் எனும் திரை கதாநாயகர்களை பார்த்து பிரமித்து நின்ற  சமயத்தில் தங்களுடைய அன்றாட வாழ்  வில் எவ்வித ஒளி வட்டமும் இல்லாமல்,  வாழ்வின் அத்தனை அம்சங்களோடும் ஒன்றிக் கலந்த, ஒளி ஏற்றிய ஒரு போரா ளியை பற்றி தற்கால தலைமுறைக்கு அவ்வரலாற்றை சொல்ல வேண்டாமா? அப்படி என்ன செய்தார்? என்ன சாதனை? என்ன வாழ்க்கை மாற்றத்தை தந்தார்? யாரவர்? 

பி.சீனிவாச ராவ் எனும் பெயர் கொண்ட பி.எஸ்.ஆர். 

1907 கர்நாடக மாநிலத்தில் பிறந்த பி. சீனிவாசராவ் சிறு வயதிலேயே தந்தை யை இழந்து, தாயால் வளர்க்கப்பட்ட வர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காக படிப்பை, செய்த  வேலையை துறந்து போராட்டங்களில் ஈடுபட்டவர். அப்படி நடந்த போராட்டங் களின் போது பிரிட்டிஷ் போலீசால் தாக்  கப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட  போது, உயிருக்கு போராடிக்கொண்டி ருந்தவரை காப்பாற்றியவர் ஒரு தாசி  தாய். அவரைத் தன் தாயாக போற்றியவர் பி.எஸ்.ஆர். விடுதலை வேள்வியில் தன்னை அர்ப்  பணித்த சீனிவாச ராவ் சிறையிலிருந்த போது நேதாஜி சுபாஷ் சந்திரபோசின்  தொடர்பு கிடைத்தது. ஏகாதிபத்தியத்தின் கோர முகம் பற்றி தெளிவான பார்வை பெற்றார். சோசலிச கருத்துக்கள் பற்றி  தெரியவந்தது. தொடர் சிறை வாசத்தில் நடந்த உரையாடல்கள் அவருக்கு அரசி யல் வெளிச்சத்தை ஊட்டின.  தென் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி யை உருவாக்குவதற்காக பணிக்கப்பட்ட மகத்தான தோழர் அமீர் ஹைதர்கான் அவர்களை சிறையில் சந்திக்கும் வாய்ப்பை அந்நிய துணி எரிக்கும் போராட்  டம் ஏற்படுத்தித் தருகிறது. இருவரும் ஒரே சிறையில்.. விவாதங்கள்..அரசி யல் பார்வை விசாலம் அடைகிறது. அமீர்  ஹைதர் கான், பேராசான் காரல் மார்க்ஸ்,  பிரடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய “கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கையை” வாசிக்கிறார். சிந்தனையில் மாற்றம் வித்திடுகிறது.  மீண்டும் ஒரு முறை படிக்க… தேசிய சிந்தனை மாறி வர்க்க பார்வை மேலோங்  குகிறது. மானுட விடுதலைக்கு மார்க்சி யத் தத்துவமே தீர்வு என திடமாக நம்பு கிறார். 

இரண்டாவது காவிரியாக...

தான் ஏற்றுக்கொண்ட கட்சியினை அமைப்பாக உருவாக்க தமிழகத்துக்கு அனுப்பப்படும் தோழர் சீனிவாச ராவ் எதிலிருந்து துவங்குவது என யோசித்து, கிராமப்புற விவசாயிகளையும், தொழி லாளர்களையும் திரட்ட முடிவெடுத்து ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டத்திற்கு வருகிறார். மொழி ஓரளவே தெரியும்..கட்சி அமைப்பே கிடையாது.  அடிப்படையிலிருந்து உருவாக்க வேண்டும். எப்படி செய்வது? அதற்கு மக்களின் பாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்… கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளின் துன்ப துயரங்களை பார்த்தார்.. அதிகாலை 4மணிக்கு கொம்பு ஊதியதிலிருந்து துவங்கும் வேலை. ஓய்வில்லாமல் வெறும் கஞ்சியை குடித்து, அந்தி போய் இரவு 8 மணி வரை வயலில் முதுகெலும்பு வளைந்து போய் …என்ன துயரமான வாழ்க்கை.. உடல் நலம் சரி இல்லையென்றால் கூட விடுப்பு சொல்ல முடியாது.. வந்து  நொந்து தான் ஆக வேண்டும். அதையும்  மீறி வரவில்லை என்றால் சவுக்கடி தான்.  ஏனென்றால் அவர்கள் பண்ணைகளின் அடிமைகள்..  அடிமையா? அதென்ன என தெரிந்து  கொண்டார். விவசாயக் கூலி தொழிலா ளர்களின் வீட்டு குழந்தைகள் படிக்கக் கூடாது, பண்ணையாரின் அனுமதி பெற்ற  பின்னர் தான் திருமணம், திருமணத் திற்கு முன்னரே வயது வந்த பிள்ளை களை பாலியல் வல்லுறவுக்கு கொடுப் பது, வளர்க்கும் மாடுகளின் முதல் கன்றை அளிப்பது, வயல் வேலை மட்டு மல்லாமல் பண்ணையார் வீட்டுக்கு தேவையான பணிவிடைகளை செய்வது  என கொடுந்துயர் மிக்க வாழ்க்கையை வாழும் மக்களின் துயர் போக்கவேண் டும் என்பதே பிரதானம் என முடிவெ டுத்தார்.  விவசாயிகளுக்கு இந்த கொடுமை யிலிருந்து விடுதலை பெற்றுத் தரு வதே குறிக்கோள், அதற்காக இந்த ஏது மறியாத அப்பாவிகளை திரட்டி உரிமை களை பெற்றுத் தருவதே இவர்களுக்கான வாழ்வின் விடியல் என தீர்மானித்து களமி றங்கினார்.

கற்றுக் கொண்டார்  கற்றுக் கொடுத்தார் மாற்றிக் காட்டினார்

 நிலத்தை வளமாக்கும் காவிரியை போல் வாழ்வை வளமாக்க காவிரியாக  கிராமங்களை வலம் வந்தார் பி.எஸ்.ஆர்.  மொழியை, அவர்களின் அன்றாட வாழ்வியலை அம்மக்களோடு இரண்ட றக் கலந்து கற்றுக் கொண்டார். அவர்கள் கொடுத்த நத்தை, நண்டுகளை உண்ணப்  பழகினார். அத்துடன் அவர்களுக்கு உரி மைகளைக் கேட்க கற்றுக் கொடுத்தார். எதிர்த்து நிற்க துணிவை ஏற்படுத்தினார். அடித்தால் திருப்பி அடி என்றார். துணிந்து நில் தொடர்ந்து செல் என்றார்.  சாணிப்பால் சாட்டையடியை நிறுத்து என  முழங்கச் செய்தார். வேலைநேரத்தை சூரியன் உதித்த பின்னும் மறையும்  முன்னும் என்று மாற்றிட கோரிக்கை  வைத்தார். அமாவாசை கூட்டங்கள் நடத்தினார். அவரே முன்நின்று ஊர்வ லம் நடத்தினார். முந்தைய கொடுமை கள் முடிவுக்கு வந்தன. புதிய நடைமுறை கள் ஏற்படுத்தப்பட்டன. தொழிலாளர்கள் தோளில் துண்டு போட்டு கம்பீர நடை போட்டனர். பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்டது. விடிவு காலம் பிறந்தது.  புதிய மனிதர்களாய் உலா வந்தனர். நியா யமான கூலி வழங்கல் நடைமுறைக்கு வந்தது. நியாயமான குத்தகை முறை யும் ஏற்படுத்தப்பட்டது. மொத்தத்தில் அடிமை நிலை மாறி சுதந்திர மனிதர் களாய் உலாவும் நிலை உருவானது. இவை யாவும் பிஎஸ்ஆர் அந்த மக்க ளையே திரட்டி அவர்களாலேயே சாதித்  தார். அதுவே அவரது சாதனை. புதிய வர லாறு. அதனால்தான் இன்றும் கூட அவ ரது புகழ் நாட்டுப்புறப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்றென்றும் ஒலிக்கும்.

- என்.சிவகுரு