tamilnadu

img

காலை உணவுத் திட்டம்: வேலூரில் முதல்வர் ஆய்வு

வேலூர், பிப்.2- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின்,வேலூர், சத்துவாச்சாரி, சி.எம்.சி. காலனியில் செயல்பட்டு வரும்  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மைய சமையற் கூடத்திற்கு  சென்று வியாழனனன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.   “கள ஆய்வில் முதலமைச்சர்”என்ற புதிய திட்டத்தின் கீழ் வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திரு வண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு  மேற்கொள்வதற்காக பிப். 1 அன்று  வேலூர் மாவட்டத்திற்கு சென்ற  முதலமைச்சர், வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திரு வண்ணாமலை, மாவட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக 2வது நாளாக   வியாழனன்று (பிப்.2)   வேலூர், சத்து வாச்சாரி, பாரதி நகரில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சுகாதார  நல மையத்தின் கட்டுமானப் பணிகளை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து வேலூர், சத்துவாச்சாரி, சி.எம்.சி. காலனியில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மைய சமையற் கூடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியை பார்வையிட்டார். மேலும், அங்குள்ள ஒவ்வொரு சமையல் அறைகளுக்கும், உணவு ஏற்றும் பகுதிக்கும் சென்று பார்வையிட்டார். உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் உணவை சுகாதாரமான முறையில் தரமாகவும், சுவையாகவும் தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர், சத்துவாச்சாரி, காந்தி நகரி லுள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு சென்றார். அங்கு சிற்றுண்டி  உணவை  உண்டு தரத்தை ஆய்வு  செய்தார். தொடர்ந்து, அலமேலுமங்கா புரம் ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கும் சென்று மாணவர்களுக்கு உணவு பறி மாறினார். இந்த ஆய்வின் போது, அட்ட வணையில் குறிப்பிட்டுள்ளபடி திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காய்கறி சாம்பாருடன் கூடிய உப்புமா வகைகளும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிச்சடி வகை களும், வெள்ளிக்கிழமை மட்டும் இனிப்பு கேசரியும், புதன்கிழமை காய் கறி சாம்பாருடன் கூடிய பொங்கல் வகைகளும் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர்  அதிகாரிகள் உடனிருந்தனர்.

;