tamilnadu

img

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுக!

புதுதில்லி, டிச.4- கொரோனா வைரஸ்  தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும் பத்தினருக்கு ஒன்றிய அர சாங்கம் உரிய இழப்பீடு வழங் கிட வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவை உறுப் பினர் பி.ஆர். நடராஜன் வலி யுறுத்தினார். நாடாளுமன்ற குளிர் காலக்கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. நாடாளு மன்ற நடத்தை விதிகள் 193 ஆவது பிரிவின் கீழ் நடை பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பி.ஆர். நடராஜன் பேசியதாவது: கொரோனா வைரஸ் தொற்று, சுனாமியைப் போன்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுகா தாரம் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒன்றிய அரசாங் கத்தின் மோசமான அணுகு முறையின் காரணமாக நிலை மை மேலும் மோசமாகி இருக்கிறது. ஆயிரக்கணக் கானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருக்கிறார்கள். ஒன்றிய அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுத்திருந் தால் இத்தகைய சாவுகளைத் தவிர்த்திருக்க முடியும்.

இரு விஷயங்களில் முன்னுரிமை

ஒன்றிய அரசாங்கம் இரு விஷயங்களில் அதிக அளவு முன்னுரிமை கொடுத்து நட வடிக்கை எடுத்திட வேண் டும். முதலாவதாக, அனைத்து மருத்துவமனைகளுக்கும் மருத்துவ ஆக்சிஜன் சிலிண் டர்கள் விநியோகம் செய் வதை உத்தரவாதப்படுத்தி, அந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் இறப்பதைத் தவிர்த்திட வேண்டும். அடுத்து அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் தேவையான கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கிட வேண்டும். இதற்குத் தேவையான தடுப்பூசிகளை உலகம் முழு வதிலுமிருந்து அனைத்து விதமான வழிகளிலும் பெற்று விநியோகித்திட வேண்டும். இதன்மூலம் மேலும் இறப்பு கள் ஏற்படுவதைத் தவிர்த்திட வேண்டும்.

தடுப்பூசி உற்பத்திக்கு கட்டாய உரிமம்

அடுத்து நம் நாட்டிலும் தடுப்பூசி உற்பத்தியை விரிவு படுத்திடக்கூடிய விதத்தில் கட்டாய உரிமம் வழங்கிட வேண்டும். 35 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டுத் தொகையை இதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளை நிறுத்திட வேண்டும். அதற்கு ஒதுக்கிய தொகைகளையும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் தடுப்பூசிகள் வாங்கு வதற்குப் பயன்படுத்திட வேண் டும். கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்றிய அரசு உரிய இழப்பீடு வழங் கிட வேண்டும். இவ்வாறு பி.ஆர். நட ராஜன் பேசினார். (ந.நி.)

;