tamilnadu

சிறுமிக்கு பாஜக பிரமுகர் பாலியல் சீண்டல் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார்

சிறுமிக்கு பாஜக பிரமுகர் பாலியல் சீண்டல் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார்

சேலம், செப்.2- 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக பிரமுகரை கைது செய்ய  வேண்டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலை யத்தில் புகாரளித்துள்னர். சேலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மூன்று  குழந்தைகள் உள்ளனர். இவர், தனது கண வருடைய அக்காவின் 8 வயது பெண் குழந்தையும் சேர்த்து பராமரித்து வருகிறார்.  இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகரான தமிழரசன் என்பவர், அச் சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, ஆடைகளை களைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த பெண்ணின் ஆண் குழந்தை பார்த்து, வீட் டில் தெரிவித்ததை தொடர்ந்து, சிறுமியின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து அவரை மீட்டனர். மேலும், தப்பியோ டியது அப்பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுக ரான தமிழரசன் என்பது தெரியவந்த நிலை யில், அவரை உடனடியாக கைது செய்ய  வேண்டும் என வலியுறுத்தி சிறுமியின் குடும் பத்தினர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். பாதிக் கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம்  மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் தலை யிட்டு நியாயம் கிடைக்க உதவி வருகின்ற னர்.