கடலூர், ஜூலை 28 - நாடாளுமன்ற கூட்டத்தை கூட நாடக மன்ற கூட்டமாக பாஜக நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன் குற்றம்சாட்டினார்.இதுதொடர் பாக வியாழனன்று (ஜூலை 28) நெய்வே லியில் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசை எந்த வகையிலும் விமர் சனம் செய்யக்கூடாது என்பதாகவே பாஜக நடந்து கொள்கிறது. நாடாளு மன்றத்திற்கு வெளியே போராடினாலும் நடவடிக்கை என்கிறது. அந்த வகையில் இதுவரை 27 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்துள்ளனர். நாடாளுமன்ற ஜனநாய கத்தை சீர்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது. சர்வாதிகாரத்தை நோக்கி ஒன்றிய பாஜக அரசு செல்கிறது. ஜனநாயக எண்ணம் கொண்ட அனை வரும் கிளர்ந்தெழ வேண்டும். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி இறந்தது தொடர்பாக உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண் டும். இதில், தேவையில்லாமல் சாதி பிரச்சனையை இழுக்கின்றனர். இதனால் மேலும்மேலும் சிக்கல்தான் உருவாகும், தீர்வுகாண உதவாது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சந்தேகத்தின் பேரில் அப்பாவிகளை கைது செய்யக் கூடாது
என்எல்சியின் சட்ட விரோத செயல்
என்எல்சி பயிற்சி பொறியாளர்கள் 299 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடை பெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் கூட இல்லை. என்எல்சி நிறுவனம் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் தேர்வு நடைபெறுகிறது. ஆனால் ஒரு வர் கூட வெற்றி பெறவில்லை என்றால் தகுதியானவர்கள் யாரும் தமிழகத்தில் இல்லையா? ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வு களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இதில் வெற்றி பெறவில்லை என்றால் ஏற்க முடியுமா? நிர்வாகம், மோசடியான தேர்வை நடத்தி யுள்ளது. 299 பேர் பணி நியமனம் சம்பந்த மாக சிஐடியு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கு நிலு வையில் இருக்கும்போது, சான்றிதழ் சரி பார்ப்பு, உடற் தகுதி தேர்வுக்கு அழைத்திருப்பது சட்ட விரோதமானது. இதனை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதனை எதிர்த்து இயக்கத் திற்கு செல்வோம். என்எல்சி நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளி எண்ணிக்கை 6000த்திற்கும் கீழே குறைந்துவிட்டது. 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளி களாக உள்ளனர். ஒப்பந்தத் தொழி லாளர்களை நிரந்தரப்படுத்துவதற்கான ஏற்பாடு இல்லை. 4 வருடத்திற்கு பிறகு அதிகாரிகளைத் தவிர தொழிலாளர்கள் யாரும் நிரந்தர ஊழியர்களாக இருக்க மாட்டார்கள்.
பயிர்க்காப்பீடு
இந்த ஆண்டுக்கு பயிர்க் காப்பீடு செய் வதற்கான கால அவகாசம் 31ஆம் தேதி யுடன் முடிவடைகிறது. ஆனால், விவ சாயிகளுக்கு பயிர்க் காப்பீடு செய்வதற் கான நிறுவனங்கள் எது என்று தெரியாத நிலை உள்ளது. இரண்டு நாளில் தமி ழகத்தில் பயிர்க்காப்பீடு செய்வது என்பது சாத்தியமில்லை. எனவே, முதலமைச் சர், ஒன்றிய அரசோடு பேசி பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலத்தை மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும். பயிர்க் காப்பீடு செய்வதற்கான நிறுவனங்களை தேர்வுசெய்து உடனடியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின்போது, கட்சி யின் மாவட்டச் செயலாளர் கோ.மாத வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. ஆறுமுகம், எஸ். திருஅரசு, நகர செயலாளர் ஆர்.பாலமுருகன், சிஐடியு சங்கத் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.