பாஜகவுடன் உறுதி யாக ஒட்டிக்கொண்டும், இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்றும் பாஜகவை நம்பி பேசியும், வந்த ஓபிஎஸ் - நட்டாற்றில் விடப்பட்டுள் ளார். தங்களிடம் தவமாய் தவம் இருந்த ஓபிஎஸ்சுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்காமல் 39 தொகுதிகளையும் அறிவித்து, பாஜக அவருக்கு அல்வா கொடுத்து விட்டது. மீண்டும் ஆரம்பத்தில் இருந்தா என்பார்களே, அது போல், என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது சென்னையில் தனது ஆதர வாளர்களை வைத்து நடத்திய கூட்டத்திலும், முக்கிய நிர்வாகிகள் அவரை கடுமையாக விமர்சித்ததாக தக வல்கள் தெரிவிக்கின்றன. சிலர் ஓபிஎஸ் இன்னும் கூடவா பாஜகவை புரிந்துகொள்ளவில்லை என கேள்வி எழுப்பியதாக கூறுகின்றனர். பாஜக தனக்கு தேவைப்படும் போது சிலரை பயன்படுத்திக் கொள்வார்கள், பிறகு அவர்களை கண்டும் காணமல் ஒதுக்கி விடுவார்கள், தேவைபட்டால் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை பயன்படுத்தி அவர்களை மிரட்டுவார்கள் என்பதுதான் அவர்களின் வரலாறு என்பதை இனிமேலாவது பாஜக வுடன் கூட்டணிக்கு செல்லும் கட்சிகள் புரிந்துகொள்ளுமா? பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு : பாஜக - 20, பாமக - 10, தமாகா - 3, அமமுக - 2, புதிய நீதிக்கட்சி - 1, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - 1, இந்திய ஜனநாயக கட்சி - 1, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் - 1. இதில் 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.