tamilnadu

img

உதகை ஏரியில் பறவை கணக்கெடுப்பு பணி

உதகை, பிப்‌.8 நீலகிரியில் அதிகபட்சமாக உதகை ஏரிக்கு 13 வகை யான வெளிநாட்டு பறவைகள் வருகை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள்  கணக்கெடுப்பு பணி ஏரிகள் மற்றும் குளங்களில் நடை பெற்றது. கணக்கெடுப்புக்கு முந்தைய நாள் கல்லூரி  மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து நீலகிரி வன கோட்டத்தில் 14 இடங் களில் சுமார் 30 தன்னார்வலர்கள், பறவைகள் கணக் கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் நீலகிரி மாவட்டத்தில் உதகை படகு இல்ல ஏரியில்  பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்தது.  இதேபோல் மார்லிமந்து, வெலிங்டன், எமரால்டு பகுதியிலும்  பறவைகள் அதிகளவில் இருந்தன. இதுகுறித்து வனத்துறை அலுவலர் மற்றும் பறவை ஆர்வலர்கள் கூறிகையில், சதுப்பு நிலங்களில் மட்டும் நடந்த இந்த பறவைகள் கணக்கெடுப்பில், நீலகிரியில் 35  வகையான பறவை இனங்கள் மற்றும் 900க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் உதகை படகு இல்லத்தில் மட்டும் 26 வகை பறவை இனங்கள் மற்றும்  600 பறவைகள் காணப்பட்டன. இதில் ஆற்று உள்ளான், தட்டை வாயன் உள்பட 13 வகையான பறவைகள் வெளி நாட்டை சேர்ந்தவைகள் என்பது சிறப்பம்சமாகும். குறிப்பாக,  இங்கு 6 வகையான வாத்து இனங்கள் அடையாளம் காணப் பட்டதில், 5 வகை வாத்து இனங்களில் ஐரோப்பிய பகுதியை  சேர்ந்தவையாகும். தற்போது ஐரோப்பா முழுவதும் கடுமையான பனி நிலவு வதால் அவை உணவு மற்றும் ஈர நிலங்களுக்காக இந்த இடத்தை தேடி வந்துள்ளன. இவை இங்கு 6 மாதம் தங்கி  இருந்து மீண்டும் செல்லும். படகு இல்ல குளத்தில் பறவைகள் அதிகளவில் வருகைக்கு முக்கிய காரணம், அந்நிய நாட்டு மீன்கள் இங்கு  உள்ளன. மேலும் ஆகாய தாமரை இருக்கிறது.

இதேபோல்  நீர் பறவைகள் பொதுவாக அதிக ஆழம் கொண்ட பகுதி களை விரும்பாது, உதகை ஏரி குறைவான ஆழம் கொண்ட தாகும்.  இந்நிலையில், அதிகரித்து வரும் மக்கள் தொகை காரண மாக உதகை ஏரி அதிகமாக மாசுபடும் சூழ்நிலை இருந்தாலும்,  மாவட்டத்தில் அதிகளவில் பறவைகள் இருப்பது ஆச்சரி யத்தை ஏற்படுத்தியுள்ளது.  உதகை, கோடப்பமந்து கால்வாயில் இருந்து வரும் கழிவு நீர் அதிகளவில் மாசுபட்டால் உதகை ஏரியின்  சுற்றுச்சூழல் தன்மை பாதிப்பு ஏற்படும். இதனால் இந்த  பறவை இனங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. எனவே, இது பாதுகாக்கப்பட்ட ஈரநிலமாக அறிவிக்கப் பட வேண்டும். இங்கு பல்லுயிர் பெருக்கத்தை பராமரிக்கும்  வகையில், நீர் சுத்திகரிப்பு பணிகளில் கூடுதல் தொழில்  நுட்பங்களை கொண்டு வர வேண்டும் என தன்னாவலர்கள் தெரிவித்தனர்.  இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில்,  சமவெளி மற்றும் குறைந்த உயரத்தில் உள்ள ஈரநிலங் களைக் காட்டிலும் மலை பிரதேச ஈர நிலங்களில் பறவை களின் பல்லுயிர்ப் பெருக்கம் கணிசமாகக் குறைவாக இருக் கிறது. வரும் ஆண்டுகளில், குளிர்கால மாதங்களில் வனத் துறையினர் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் வசிக்கும் பறவை யினங்கள் மற்றும் உயிரினங்களை தொடர்ந்து கண் காணிக்கும் பணிகள் தீவிர படுத்தப்படும் என்றார்.

;