tamilnadu

சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு விருது

சென்னை,பிப்.25- சிறந்த அறிவியல் ஆசிரியர்க ளுக்கு ரூ. 25 ஆயிரம் மற்றும் விருது வழங்கப்படும் என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இது குறித்து தமிழக அரசு  வெளி யிட்டுள்ள அறிவிப்பில்,  மாணவ சமு தாயத்தின் நலனுக்காக இன்றியமை யாது பணியாற்றும் அறிவியல் ஆசி ரியர்களை கண்டறிந்து அவர்களை அங்கீகரிக்கும் வண்ணம் “சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதினை வழங்குவதற்கு அறிவியல் நகரத்தி ற்கு அரசால் ஒப்பளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசு அல்லது அரசு உதவி பெறும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரி யும் ஆசிரியர்களில் சிறந்த அறி வியல் ஆசிரியர்களை கண்டறிய வும், ஊக்கப்படுத்தவும், அதன் ஊடாக மாணாக்கர்களை எதிர் காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அறிவியலாளர்களாக உயர்த்துவதற்கும், வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதுக்கு தேர்ந்தெடுக் கப்படும் 10 ஆசிரியர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இவ்விருதிற்கு ஐந்து பாடப் பிரிவுகள் அறிவியல் நகரத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் புவியியல் / கணினி அறிவியல் / வேளாண் நடைமுறைகள் ஆகிய பாடப்பிரிவுகள் இடம்பெற்றுள்ளது. இவற்றுள் ஐந்து விருதுகள் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், மேலும் ஐந்து விருதுகள் பொதுப்பிரிவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பிரித்து வழங்கப்படும். இதற் கான விண்ணப்பப்படிவம், விண் ணப்பிக்க தொடர்பான விதிகள் ஆகியவைகளை www.science citychennai.in என்ற அறிவியல் நகர இணையதளத்தில் பதி விறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்கள் தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் ஆணையர், பள்ளிக் கல்வித் துறை அவர்களின் வழியாக அறிவியல் நகரத்திற்கு 07.03.2022 மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.