tamilnadu

img

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி அரசுத் துறை சார்ந்த வணிகத்தில் ஈடுபட அங்கீகாரம்

தூத்துக்குடி, டிச.1-  பாரதிய ரிசர்வ் வங்கி தனது சார்பாக, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியினை அரசு துறை சார்ந்த வணி கத்தில் ஈடுபட அங்கீகாரம் அளித்துள் ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியினை அரசு  துறை சார்ந்த வணிகத்தை மேற்கொள்ளுதலுக்கான முகவர் வங்கியாக நிர்ணயித்ததற்கான ஒப்பந்தம் பாரதிய ரிசர்வ் வங்கியுடன் மும்பையில் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி. தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி.  பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து, மேலும் தனது தொலை நோக்கு பார்வையாக, இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரு கிறது. தற்போது பாரதிய ரிசர்வ் வங்கி  அரசு துறை சார்ந்த வணிகத்தை மேற் கொள்ளும் ஒரு முகவர் வங்கியாக அங்கீகாரம் அளித்துள்ளது.

இது பற்றி வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் விளக்கிய தாவது:  பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பிறகு, வங்கியானது மீண்டும் தனது  தொலை நோக்கு திட்டமாக நாடெங்கி லும் மீண்டும் விரிவாக்க நடவடிக்கை களில் அதன் திட்டங்களிலும் சேவை களிலும் புதிய பரிமாணங்களை உட் படுத்தி வருகிறது. தற்போது பாரதிய ரிசர்வ் வங்கியானது நமது வங்கி யினை அரசு துறை சார்ந்த வணிக நடவடிக்கைகளை கையாள்வதற் கான முகவர் வங்கியாக அங்கீ காரம் அளித்துள்ளது. இதனை வங்கி யின் அனைத்து நிலை உடமை தாரர்களுக்கும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி லிமிடெட் (TMB), வங்கியானது ஒரு பெயர்பெற்ற பழைய தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியில் தலைமை அலுவலகம் கொண்ட இந்த  வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரை முறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டி வரு கிறது. இந்த வங்கியானது, இந்தியா  முழுவதிலும் 15 மாநிலங்கள், நான்கு  யூனியன் பிரதேசங்களில் 509 கிளை கள், 12 மண்டல அலுவலகங்களின் மூலம் சுமார் ஐம்பது லட்சம் வாடிக்கை யாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது. வங்கியினைப் பற்றி  www.tmb.in என்ற இணையதள முக வரியில் மேலும் அறியலாம்.  (ந.நி)

;