tamilnadu

img

கலைஞர் நினைவு நாணயம் ஒன்றிய அரசு அனுமதி

சென்னை, ஜூலை 10- தமிழ்நாட்டின் முன்னாள் முதல மைச்சர், திமுகவின் முன்னாள் தலைவர் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு  நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது.  இதற்காக, ரூ.100 மதிப்பிலான நினைவு நாணயம் வெளியிடும்படி ஒன்றிய நிதி யமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு சார்பில்  கடந்த வருடம் கோரிக்கை வைக்கப்பட் டது. இந்த நாணயத்தை கலைஞர் கரு ணாநிதியின் நூறாவது பிறந்த நாளில்  கடந்த ஜூன் 3-ல் வெளியிட திட்டமிடப் பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது. இந்நிலையில், நாணயத்திற்கான அனுமதி கோப்பில் ஒன்றிய நிதி அமைச்  சர் நிர்மலா சீதாராமன் கையொப்பம் இட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அர சின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதலமைச்சர் ‘முத்தமிழ் அறிஞர் கலை ஞர் டாக்டர் மு.கருணாநிதி’என்ற பெய ரில் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய  அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவ ரின் பெயருடன் ‘தமிழ் வெல்லும்’ என்ற  வாசகம் இந்த நாணயத்தில் இடம் பெற  உள்ளது. இதற்கான உத்தரவு விரை வில் ஒன்றிய அரசின் கெஜட்டில் வெளி யாக உள்ளது. இதற்கான மாதிரி வடி வத்தை தமிழக அரசு வழங்கி உள்ளது.