tamilnadu

திமுக கூட்டணிக்கு பேராயர்கள் ஆதரவு

சென்னை, பிப்.17- திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டா லினை தென்னிந்திய திருச்சபைகள் பொதுச் செயலர் சி.பெர்னாண்டஸ் ரெத்தினராஜா, பேராயர் கள் ஜோசப் (மதுரை), தீமோத்தேயு (கோவை), ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன் (சென்னை), பர்ணபாஸ் (நெல்லை), சர்மா நித்யானந்தா (வேலூர்), சென்னை பேராயர் செயலர் அறிவர் மேனியல் டைட்டஸ், சிஎஸ்ஐ பிஷப் சாப்ளின் ஏனஸ், சிஎன்ஐ பொதுச்செயலாளர் தயாநிதி, உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு  அளிப்பதாக முதல்வரிடம் பேராயர்கள் தெரி வித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் திருச்சபை பொதுச்செயலர் சி.பெர்னாண்டஸ் ரெத்தினராஜா கூறும்போது, ‘‘கிறிஸ்தவ மக்களுக்கு திமுக அரணாக உள்ளது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளித்து, அவர்களின் வெற்றிக்காக உழைப்போம் என முதல்வரிடம் தெரிவித்துள்ளோம்’’ என்றார்.