tamilnadu

img

பாளை.யில் குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்ப்பு மாநாடு

திருநெல்வேலி, ஜன.17- பாளையங்கோட்டை மேட்டுத்திட லில், தேசிய குடியுரிமை திருத்தச் சட்ட த்துக்கு எதிரான மாநாடு வியாழக்கி ழமை நடைபெற்றது. திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட முத்தவல்லிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு முஸ்லிம் அனாதை நிலைய நிர்வாக கமிட்டி தலைவர் டி.இ.எஸ். நெய்னா முஹம்மது தலைமை வகித்தார். என்ஜிஓ காலனி ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் கே.எம். ஏ.நிஜாம், திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட முத்தவல்லிகள் சங்கப் பொரு ளாளர் கே.செய்யது அப்பாஸ் உள்ளி ட்டோர் முன்னிலை வகித்தனர்.  சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கே. பாலபாரதி, விடுதலைச் சிறுத்தை கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர்  ஆளூர் ஷா நவாஸ், ஜமாஅத்தே அஸ்லாமி ஹிந்த் மக்கள் சேவை செயலர் எஸ்.எம்.சிக்கந்தர், திருநெல்வேலி மக்க ளவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஞான திரவியம், சட்டப்பேரவை உறுப்பி னர்கள் பளையங்கோட்டை டி.பி.எம்.மைதீன்கான், கடையநல்லூர் முஹ ம்மது அபூபக்கர் உள்ளிட்டோர் உரையா ற்றினர். 

மாநாட்டில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார். நெல்லை-தூத்துக்குடி மாவட்ட முத்தவல்லிகள் சங்க செயலாளர் எம்.கே.எம்.முஹ ம்மது ஷாபி நன்றி கூறினார். முன்னதாக காலையில், நெல்லை டவுண் சன்னதி தெருவில் உள்ள நெல்லை கண்ணனின் வீட்டில் அவரை காதர் மொகிதீன் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழில் பேச்சு வழக்கு மொழி என்பது மாவட்டங்கள்தோறும் வேறுபடும். அந்த வகையில் நெல்லை கண்ணன் பேசியதை தவறாக புரிந்து கொண்டு கைது செய்ததை இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் கட்சி கண்டிக்கிறது. அவர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றார்.

;