tamilnadu

img

கலவரத்தின் உடற்கூறியல் - ஷேக் முஜிபூர் ரகுமான்

தி ஹிந்து (ஆகஸ்ட் 10, 2023) ஆங்கில பத்திரிகையில் வெளியான ஹரி யானா நூஹ்-குர்ஹான் கலவரம் குறித்த கட்டு ரையின் பிரதான அம்சங்கள் :

1. அலிகர் மற்றும் மீரட் கலவரங்கள் குறித்த ஆய்விற்கு பின்னர் வரலாற்று ஆய்வாளர் பால் ஆர் பிராஸ், (Paul R brass) அவர்களின் கூற்றான “ நிறுவனமயமாக்கப்பட்ட கலவர அமைப்பு” குறித்து வாசிக்க, இந்த கலவ ரங்கள், அறிவுஜீவிகளை மீண்டும் தூண்டும். என்னுடைய கருத்தில் அதன் கூடவே அரசின் பெரும்பாலான களங்களிலும் இந்து பெரும்பான்மையின் ஊடுருவல், அரசு இயந்திரத்தின் கையாலாகாத்தனம், கலவ ரங்களுக்கு உடந்தையாக இருத்தல் என்ப வையும் கலவரங்களின் காரணிகளாக அமைகின்றன.

2. ‘ஒரு இனத்தையே முழுமையாக துடைத்து எறிகிற அரசுடைய செயல்பாடு’ என்கிற புல்டோ சர் நீதியை குறித்த ஹரியானா-பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் கருத்து, அரசின் சித்தாந்த நோக்கத்தின் பதிலைக்குறித்து (ideological intent of state response) ஏராள மான விஷயங்களை வெளிப்படுத்துகிறது.

3. வலதுசாரி பாஜக அரசுகள் கலவரங்கள் இல்லா ஆட்சிகள் என்கிறதான கூற்றுகள் இன்றும் சொல்லப்படுகின்றன. ஹரியானா குர்கான் கலவரம் அதனை பொய் என நிரூபிக்கிறது. இந்தவருடம் ஏப்ரல் மாதத்தில் உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அப்படியானதொரு வாதத்தை முன் வைத்தார். 2021 இல் மட்டும் உ பி யில் 5302 கலவரங்கள் நடைபெற்றதாக தேசிய குற்ற ஆவண முகமை தகவல் தருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர், மும்பை, சம்பாஜிநகர், ஜலகாவ், அகோலா, அகமதுநகர் என்னும் இடங்களில் இவ்வருடம் மட்டுமே பல கலவரங்கள் நடந்துள்ளன.

4. அனைத்து கலவரங்களும் ஒரே பாங்கில் (one pattern ) நடந்திருப்பதை பார்க்க முடிகி றது. ஒரு மத ஊர்வலம், ஒரு கோயில் அல்லது மசூதி, இவை இல்லையேல் சமூக வலைத் தளங்களில் வலம்வந்த ஒரு பதிவு இவையே கலவரத்தின் காரணங்களாக அமைகின்றன. நூஹ் கலவரமும் இந்த வடிவிலே நடந்துள் ளது. பால் பிராஸ் கூற்றுப்படி கலவரங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று கட்டங்கள் உள்ளன, தயாரிப்பு/ஒத்திகை, செயலாக்கம்/அரங் கேற்றுதல், விளக்கம் சொல்லுதல்/வியாக்கி யானம் செய்தல் என்பவையே அந்த மூன்று  கட்டங்கள். கலவரங்களின் வியாக்கியா னத்திற்கு கொடுக்கப்படுகின்ற தத்துவார்த்தச் சுழல் (ideological spin ), அந்த கல வரத்தின் உடற்கூறின் (anatomy of the riot) உண்மையை ஒருவரிடமிருந்து விலகி நிற்கும்படியாகச் செய்கிறது.

5. நூஹ் கலவரம் குர்காமிற்கும் பரவி, ஒரு பெருந் திரள் மசூதியை தாக்கி 26 வயது இமாமை கொன்ற வேகத்தை எப்படியாக விவரிப்பது? 2018 ஆம் ஆண்டின் குர்காம் மசூதி தொழுகை விவாதம் இப்போதைய கலவரத்தின் பின்புலமாக அமைந்திருக்கக் கூடும். வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அனுமதிக் கப்பட்ட 116 பொது இடங்கள் இருந்தன, தீவிர வலதுசாரி இந்துத்துவா கும்பல்களின் நிரந்தர மான எதிர்ப்பின் விளைவாக இப்போது அவை  16 ஆக குறைக்கப்பட்டுள்ளன.  

6.ஏன் ‘வெள்ளிக்கிழமை தொழுகை’ விவாதமாக் கப்படுகின்றன? இரண்டு மணி நேரம் என்றாலும் பொதுஇடங்களில் தொழுகை நேர பெருந்திரள் சில தடங்கல்களை உரு வாக்குகின்றன என்பது உண்மை தான். விநாயகர் மற்றும் துர்கா தேவி பண்டிகை ஊர்வலங்கள் கூட சாதாரண வாழ்க்கையில் இம்மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்து கின்றன. கடந்தகாலங்களில் பரஸ்பர புரிந்துணர்விலும், மரியாதையிலும் இந்த தடங்கல்கள் எதிர்கொள்ளப்பட்டன.

7. இஸ்லாம் நம்பிக்கையின்படி வெள்ளிக் கிழமை தொழுகை என்பது பெருந்திரள் தொ ழுகையாகும். ஒரு மசூதியின் உட்பிரகாரங்க ளில் இத்தகைய பெருந்திரள் கூட்டம் சாத்தியமல்ல. எனவே உள்ளூர் ஆட்சி அதிகாரிகள் அனுமதிக்கிற பொது இடங்களில் தொழுகை செய்கிறார்கள்.

8. வற்புறுத்தி பணியவைக்கும் வழிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தின் குறுக்கீடுகள் காரணமாக தொழுகை விவாதத்திற்கு தீர்வு காணா நிலைமை ஏற்படுவது மசூதி மீதான பழி வாங்கும்படியான தாக்குதலுக்கும் (retali atory attack), அதனை தொடர்ந்த கலவரத் திற்கும் துணைநிற்கின்ற பின்புலனை உருவாக்கியுள்ளது. மிக உண்மையான, நேர்மையான மதச்சார்பற்ற குறுக்கீடுகள் ஏற்படுகின்ற வரை யிலும் இந்த கலவரங்களுக்கான அபாயமும் இருக்கும்.

தமிழில் : ஆற்றூர் என்.பி.பென்னட் ராஜ்,  கட்டுரையாளர் : பேரா.ஜாமியா மிலியா மத்தியப் பல்கலை. புதுதில்லி