திருத்தணியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரம்…
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு அலகு, இந்திய சமுதாய நல நிறுவனம் ஆகிய அமைப்புகள் இணைந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரம் நடத்தின.திருத்தணி ஆர்.டி.ஓ. கனிமொழி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பைபாஸ் சாலையில் தொடங்கிய பிரச்சாரம், மபொசி சாலை, ரயில் நிலையம், மார்க்கெட், கமலா தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்றன.
 
                                    