கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
செங்கல்பட்டு, மார்ச் 25- காஞ்சிபுரம் வெடி விபத்தில் பலியான குடும்பத்தின ருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவதுடன் குடும்பத்தில் ஒரு வருக்கு அவரது தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் நகரத்திற்கு அருகில் உள்ள குருவி மலை வசந்த் நகர் பகுதியில் நரேஸ் பயர்ஸ் என்கிற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. கடந்த புதனன்று இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். 25 க்கும் மேற்பட்டவர் fள் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரூ.10 ஆயிரம் உதவி
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார். மேலும் வெடி விபத்து நடைபெற்ற இடத்திலும் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது; காஞ்சிபுரம் அருகே வசந்தம் நகர் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டது. 9பேர் மரணமடைந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதிலும் சிலரின் நிலை மோசமாக உள்ளதாக தெரிகிறது. இந்த விபத்து மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. விபத்து குறித்து விசாரித்த போது அந்த ஆலை யில், இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வெடி பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது யார் ? என்ற பல கேள்விகள் எழுகின்றன. தொழிற்சாலையில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா? என்று சோதிப்பதற்கான அதிகாரிகள் முறையாக கண்காணித்தார்களா? என எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன.
எந்தவித அடிப்படை கட்டமைப்புகளும் இல்லாமல் விதிகளுக்கு புறம்பாக ஒரு தொழிற்சாலை நடத்திய தின் விளைவுதான் மிகப்பெரிய பாதிப்புக்கு காரணம். வெடி பொருள் தயாரிக்கும் இடத்திலேயே சேமிப்புக் கிடங்கும் இருந்ததால் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இன்னும் கூட சம்பவ இடத்தில் வெடி மருந்துகள் இருப்ப தாக தெரிகிறது. அதில் விபத்து ஏற்பட்டால் மேலும் பாதிப் புகள் ஏற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் காவல் துறை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். தொழி ற்சாலை உரிமையாளரின் மகனும் இந்த விபத்தில் இறந்திருப்பது கவலையளிக்கிறது.இருப்பினும் இந்த விபத்திற்கான முழு பொறுப்பு தொழிற்சாலையின் உரிமையாளரையே சாரும். தற்போது மாநில அரசும், ஒன்றிய அரசும் குறைந்தபட்ச நிவாரணம் வழங்கியுள்ள னர். இந்த நிவாரணம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போதுமானது அல்ல. பாதிப்புக்கு காரணமான தொழிற் சாலை நிர்வாகம் ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்க வில்லை என்பது கண்டனத்திற்குரியது.
தொழிற்சாலை நிர்வாகம் உயிரிழந்த குடும்பத்தி ற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். படுகாயம் அடைந்துள்ளவர்களுக்கு காயத்தின் தன்மை க்கு ஏற்ப உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். அதை பெற்றுத் தரவேண்டிய பொறுப்பை மாவட்ட ஆட்சியர் ஏற்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகளின் பெற்றோர் உயிரிழந்துள்ளனர். இந்த குழந்தைகளின் கல்விக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும். ஒருவேளை அந்த நிறுவனம் நிவாரணம் வழங்க மறுத்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திடவும் தயாராக இருக்கிறது என்று கூறிய பாலகிருஷ்ணன், இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும். எதிர்காலங்களில் வெடி தயாரிக்கும் தொழிற் சாலைகளில் விதிகளை முழுவதுமாக அமல்படுத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். போதிய பாது காப்புகளை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார். பேட்டியின்போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஆறுமுகநயினார், இ.முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கே.நேரு, சௌந்தரி, ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.