tamilnadu

img

3 ஆம் ஆண்டில் இடது ஜனநாயக முன்னணி அரசின் சாதனைப் பயணம் - இ.பி.ஜெயராஜன்

வாழ்த்துச் செய்தி - இ.பி.ஜெயராஜன் அமைப்பாளர்,  கேரள இடது ஜனநாயக முன்னணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, கேரளத்தில் மேற்கொண்டு வரும் சாதனைகள், நாட்டிற்கே வழிகாட்டியாக அமைந்துள்ளன. வீடில்லாதோர் இல்லா மாநிலம், குடிசைகள் இல்லா மாநிலம், கடும் நெருக்கடியின் பின்னணியிலும் சிறு, குறு, நடுத்தர தொழில்களை மிகப் பெரும் அளவிற்கு உயிர்ப்பித்த ஒரே மாநிலம், ஒன்றிய அரசு பல தருணங்களில் கைவிட்டாலும் மாற்று அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்குவதன் மூலம் உழைப்பாளி மக்களின் நலன்களை பாதுகாக்க முடியும் என மெய்ப்பித்த மாநிலம்... என்பது உள்ளிட்ட பல பெருமைகளை ஈட்டியுள்ளது இடது ஜனநாயக முன்னணி அரசு. இதன் சிறப்புகளை மக்களிடையே எடுத்துச் செல்லும் பொருட்டு, தீக்கதிர் நாளிதழ் வெளியிடும் சிறப்பிதழ் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.