கல்வி மூலம் சாதித்த திருநங்கை
சென்னை: ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை முனைவர் ஜென்சி உதவி பேராசிரி யராக நியமனம் செய்யப்பட்டு உள்ள தையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரி ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை முன்னைவர் என்.ஜென்சி, அந்த கல்லூரியின் ஆங்கில உதவிப் பேரா சிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை முனைவர் ஜென்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “வாழ்த்துகள் முனைவர் ஜென்சி. உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும். தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்!” என குறிப்பிட்டுள்ளார். மகிழ்ச்சி அளிக்கிறது முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தைத் தொடர்ந்து முனை வர் ஜென்சி கூறுகையில், “‘டாக்டர் ஜென்சி’ என என்னை குறிப்பிட்டு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்திருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள ஏதாவதொரு அரசு கல்லூரியில் என்னை பணி நிரந்தரம் செய்து வேலை வழங்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்துள்ளார்.