tamilnadu

img

ஏஐ மூலம் ஊழியர்களை கண்காணிக்கும் சூப்பர் மார்க்கெட்!

ஏஐ மூலம் ஊழியர்களை  கண்காணிக்கும் சூப்பர் மார்க்கெட்!

ஜப்பான் நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில்,  செயற்கை நுண்ணறிவு (AI) உதவியு டன் ஊழியர்களை கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படுகின்றது. ஜப்பானில் உள்ள ஏயோன் ‘AEON’  என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்களை புன்னகையுடன் அணுகுகின்றனரா என்பதை கண்காணிக்க ‘மிஸ்டர் ஸ்மைல்’ (Mr.Smile) என்ற ஏஐ அமைப்பைப் பயன்படுத்துகிறது. இந்த ஏஐ அமைப்பை, இன்ஸ்டா விஆர் (InstaVR) என்ற நிறுவனம் வடிவ மைத்துள்ளது. ஊழியர்களின் முக பாவனைகள் (Facial Expressions), பேசும் சத்தம் (Voice volume), வாழ்த்தும் தொனி (Tone of Greeting) உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட கூறு களைக் கண்காணிக்கிறது இந்த ஏஐ  அமைப்பு.  ஊழியர்கள் வாடிக்கையா ளர்களை கையாளும் விதத்தை வைத்து அவர்களுக்கு மதிப்பெண் களும் வழங்குகிறது. இந்த ஏஐ  அமைப்பை, ஏயோன் நிறுவனம்  அதன் 240 சூப்பர் மார்க்கெட்டுகளில் பயன்படுத்தி வருகிறது. ஊழியர் களை கண்காணிக்கும் இந்த அமைப் புக்கு சமூக வலைத்தளங்களில் கடும்  கண்டனங்கள் எழுந்து வருவது குறிப் பிடத்தக்கது.

கூகுள் மேப்ஸ்-இல்  மெட்ரோ டிக்கெட் முன்பதிவு வசதி!

கூகுள் மேப்ஸ்-இல் நேரடி யாக மெட்ரோ டிக் கெட்டை முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான கூகுள் மேப்ஸ் செயலியில் பல புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, இந்த வாரம் முதல் சென்னை மற்றும் கொச்சி நகரங்களுக்கு, கூகுள் மேப்ஸ்-இல் நேரடியாக மெட்ரோ டிக் கெட்டை முன் பதிவு செய்யும் வசதி வழங்கப் பட்டுள்ளது. இந்தியாவின் 40 நக ரங்களில், செல்லும் வழியில்  உள்ள மேம்பாலங்களை முன்கூட்டியே  அறிவிக்கும் ‘ஃப்ளைஓவர் கால்அவுட்’  (Flyover Callout) மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு குறுகிய சாலைகளை அறிவிக்கும் ‘நேரோ ரோட் இண்டிகேட்டர்’ (Narrow Road Indicator) உள்ளிட்ட அம்சங்கள் கூகுள் மேப்ஸ் செயலியில் வழங்கப் பட்டுள்ளன. இந்த அம்சம் ஆண்ட் ராய்ட் செயலி மற்றும் ஆண்ட்ராய்ட்  ஆட்டோ (Android Auto) பயனர் களுக்கு தற்போது வழங்கப்படுகிறது.  மேலும், மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டே ஷன் (EV Charging Station) உள்ள  இடங்களை கூகுள் மேப்ஸ் செயலி யில் காண்பிக்கும் வசதியும் வழங்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித் துள்ளது.

‘சர்ச்ஜிபிடி’ தேடுபொறி அறிமுகம்!

ஓபன் ஏஐ நிறுவனம் ‘சர்ச் ஜிபிடி’ (SearchGPT) எனும்  தேடுபொறியை அறிமுகம் செய்து உள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்தில் சாட் பாட்டான (Chatbot) சாட்ஜிபிடி (Chat GPT) பயனர்களிடையே பெறும் வர வேற்பை பெற்ற நிலையில், தற்போது  அந்நிறுவனம் ‘சர்ச்ஜிபிடி’ எனும் அதன் புதிய செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தேடுபொறியை அறி முகம் செய்துள்ளது. கூகுளுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட  இந்த சார்ச்ஜிபிடி, சில  பயனர்களுக்கு மட்டும்  சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. பயனர்களின் கேள்வி களுக்கு பதிலளிக்கும் வகையில், சுருக்க மான தேடல் முடிவு களை அதன் லிங்கு களுடன் சர்ச்ஜிபிடி வழங்கும் என்று ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. பயனர்கள் அடுத்தடுத்து கேள்வி களைக் கேட்டாலும், அதற்கு ஏற்ற  பதில்களைப் பெறலாம் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு  இதன் புரோட்டோடைப் (Prototype)  மாடல் தான் வெளியாகி உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.