tamilnadu

img

விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 20- அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநி லக்குழு கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் ஞாயிறன்று மாநிலத் தலைவர் மா.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பி.வெங்கட் தேசிய நிலைமைகள் குறித்து பேசி னார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம், விவ சாயத் தொழிலாளர்கள் சங்க அகில  இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம், மாநிலப் பொருளாளர் அ. பழநிசாமி, மத்திய செயற்குழு உறுப்பி னர் எஸ்.பூங்கோதை, மாநிலச் செய லாளர் எஸ்.சங்கர், மாநில துணைத் தலைவர் மலைவிளைபாசி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், விவசாயத் தொழிலா ளர்களுக்கு தனித்துறை உருவாக்கி  சமூக நல பாதுகாப்பு திட்டங்களை அமலாக்கம் செய்வதை சட்டப்பூர்வ மாக்க வேண்டும். கடுமையான விலை வாசி உயர்வு காரணமாக பாதிக்கப் ட்டுள்ள கிராமப்புற விவசாயத் தொழி லாளர்களின் கூலியை கடந்த 5  ஆண்டுகளாக உயர்த்தி அறிவிக்கா மல் இருப்பதால் வறுமையின் கோரப்பிடியில் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்; எனவே தினக் கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். திமுக தேர்தல் கால வாக்கு றுதிப்படி 100 நாள் வேலையை 150  நாளாக உயர்த்தி தொடர்ச்சியாக வழங்க வேண்டும், வீடு இல்லாத விவ சாயத் தொழிலாளர்கள் அனைவருக் கும் கேரள அரசைப் போல் இலவச வீட்டுமனை வழங்கி ரூ.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டித்தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;