tamilnadu

img

ஆரோக்கியம் காட்டும் நாக்கு - சிதம்பரம் ரவிச்சந்திரன்

சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள். உங்கள் ஆரோக்கியத்தை பற்றி உங்கள் நாக்கு என்ன சொல்கிறது? பொதுவாக மேற்பகுதியில் மெல்லிய, கெரோட்டினால் ஆன வெள்ளை நிறப்பூச்சு டன் உள்ள நாவின் நிறம் வெளிர் பிங்கில்  இருந்து கருஞ்சிவப்பு வரை வேறுபடு கிறது. நாவின் வடிவம், நிறம் மற்றும் மேற்பரப்பு ஒருவரின் ஆரோக்கியம் பற்றிய மதிப்புமிக்க தகவல்களைச் சொல்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாவின் நிறத்தை பார்த்து ஒருவரின் உடல்நிலையை கூறும் பழக்கம்  இருந்தது. பாரம்பரிய சீன மருத்துவத்தில் நாவின் பல்வேறு பகுதிகள் பல உடல் உறுப்புகளுடன் தொடர்புடையது என்று  கருதப்படுகிறது. பல உடல் செயல்பாடு களில் நாக்கின் பங்கு முக்கியமானது. உணவு உண்ண, நீர் அருந்த, உமிழ்நீரை விழுங்க, பேச, போட்டோவுக்கு பல நகைச்சுவை போஸ்களை கொடுக்க  இந்த உறுப்பு உதவுகிறது” என்று நியூ யார்க் ராச்செஸ்ட்டர் (Rochester) பல்க லைக்கழக வாய் ஆரோக்கியத்திற்கான ஈஸ்ட்மேன் கழக ஆய்வாளர் டாக்டர் யான்  பேன் ரென் (Dr Yanfang Ren) கூறுகிறார்.  “ஆரோக்கியமான நாக்கு பார்ப்பதற்கு எவ்வாறு இருக்கும்? அது பனித்துளிகள் போன்றது. ஈரப்பசையுடையது. இருவ ரின் நாக்கு ஒரே மாதிரி இருப்பதில்லை.

நிறம் மாறும் நாக்கு

“போதுமான அளவுக்கு முக்கியத்து வம் கொடுத்து நாம் நம் நாக்கை கவ னிப்பதில்லை. அதன் ஆரோக்கியத்தை அறிய அவ்வப்போது நாவை கண்ணாடி யில் பார்க்கவேண்டும்” என்று நியூயார்க்  ஆம்ஹெர்ஸ்ட் (Amherst) பஃபலோ  (Buffalo) பல்கலைக்கழக வாய் உயிரியல்  நிபுணர் டாக்டர் ப்ராங்க் ஸ்கானப்பைக்கோ  (Dr Frank Scannapieco) கூறுகிறார். நாவில் காணப்படும் மற்ற அம்சங்களுடன் சுவை மொட்டுகளும் உள்ள சிறிய புடைப்புகள் பாப்பிளி (papillae) என்று அழைக்கப்படுகின்றன. “உடல் சரிவர இயங்கவில்லை என்பதை நாவில் தெரியும் மாற்றங்களை வைத்து புரிந்துகொள்ளலாம்” என்று தேசிய ஆரோக்கிய கிளினிக்கல் மையங்க ளின் பல் மருத்துவர் ஜீவோன் லிம் (Jiwon  Lim) கூறுகிறார்.   நாம் அருந்தும், உண்ணும்  உணவை பொறுத்து இதன் அமைப்பு ஒவ்வொரு நாளும் மாறுகிறது. நீலநிறப்பொருளை சாப்பிட்டால் அதன் சாயம் நாவில் தங்கி அது நீலநிறமாக  காட்சி தரும். நுண்ணுயிருக்கு எதிரான சில வகை மருந்துகள் நாவின் நிறத்தை கறுப்பு அல்லது நீல நிறமாக மாற்றும். காபி, தேநீர், பெரி, சாக்லேட், பீட்ரூட் போன்றவை தற்காலிகமாக  நிறத்தை மாற்றக்கூடியது. சில நிலைகளில் இந்நிற மாற்றம் கவலைக்குரிய ஆரோக்கியப் பிரச்சனைகளை பிரதிபலிக்கிறது. சில சமயங்களில் ஸ்ட்ரா பெரி நாக்கு என்றும் அழைக்கப்படும் பிரகாசமான சிவப்பு நிற நாக்கு புடைப்புகளுடன் இருந்தால் அது ஒவ்வாமை, நச்சுப்பொருட்களை உண்ப தால் உண்டாகும் குறைபாடு (toxic shock  syndrome), கவசாக்கி (Kawasaki) நோய், ஸ்கார்லெட் (Scarlet) காய்ச்சல்,  வைட்டமின் பி12 பற்றாக்குறை அறிகுறி களாக இருக்கலாம்.

நாவின் ஆரோக்கியமே  நம் வாழ்வின் ஆரோக்கியம்

கவசாக்கி நோய் என்பது அரிதாக தோன்றுவது. இது இரத்த செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தி  இதயத்தை சேதப்படுத்தக்கூடியது. பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை குறிப்பாக ஆண் குழந்தைகளை இந்நோய்  பாதிக்கிறது. ஸ்கார்லெட் காய்ச்சல் என்பது  பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்று நோய். இது தடிப்பு, காய்ச்சல், தொண் டைப் புண்ணை ஏற்படுத்தக்கூடியது. மேற்பரப்பை பொறுத்து வெள்ளைத் திட்டுகள் பல ஆரோக்கிய நிலைகளை காட்டுகிறது. துலக்குவதற்கு கடினமாக உள்ள பால்வெள்ளை நிறத் திட்டுகள் சிறு குழந்தைகள், 65 வயதுக்கு மேற்  பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்களிடம் ஈஸ்ட் தொற்றால் ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சையாக பூஞ்சை எதிர் மருந்துகள் பயன்படுகின்றன. இந்த வெள்ளைத்திட்டுகள் தடித்து அகற்றமுடியாதவையாக இருந்தால் அது லூக்கோப்ளாக்கியா (Leukoplakia) அல்லது ஸ்மோக்கர்ஸ் கெரோட்டோஸிஸ் (Smoker’s keratosis) என்ற நோயின் அறிகுறி. இது சில சமயங்களில் புற்றுநோய் வரு வதன் அறிகுறியாகவும் இருக்கலாம். நாவின் மஞ்சள் கலந்த பச்சை நிறத் திட்டு கள் மோசமான வாய் ஆரோக்கியத்தை காட்டுகிறது. அதிகம் புகை பிடிப்பதால் இது ஏற்படுகிறது. புடைப்புடன் கூடிய வெண்ணிறக் கோடுகளுடன் சிவப்புத் திட்டுகள் இருப்பது பொதுவாக 30% மக்களிடம் உள்ளது. சிகிச்சை இல்லாத, வலி எதையும் ஏற்படுத்தாத இது ஒவ்வொரு நாளும் நாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு நகர்கிறது. இதனால் இது நில அமைப்பியல் நாக்கு (Geographical tongue) என்று அழைக்கப்படுகிறது. தெரியாமல் நாக்கை  கடிப்பது, எரிச்சல், ஒவ்வாமை, மன அழுத்தம், ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள், சில வகை உணவுகளுக்கு தீவிர பதில்வினை போன்றவற்றால் நாக்கில் புண்கள் ஏற்படலாம்” என்று யு எஸ் மேயோ (mayo) கிளினிக் நிபுணர்கள் கூறுகின்றனர். இது குரோன்ஸ் (Crohn’s) அல்லது செலியாக் (celiac)என்னும் நோயாலும் ஏற்படலாம்.  பாப்பிளிகள் ஒழுஞ்காக வளர்ச்சியடையாவிட்டால் நாக்கு கறுப்பு  நிற அல்லது அடர் பழுப்பு நிறத்தில் காணப்  படும். பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் இவ்வகை நாக்கு கறுப்பு உரோமங்கள் உள்ள நாக்கு (Black hairy tongue) என்று  அழைக்கப்படுகிறது. இது குளூட்டன் (Gluten) என்ற புரதம்  உள்ள கோதுமை, பார்லி, அரிசியை சாப்பிடுவதால் ஏற்படலாம்.   நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படும் உடலமைப்பு உள்ளவர்கள், ஒவ்வொரு நாளும் வாயில் சேகரமாகும் பாக்டீரியா, பூஞ்சைகளை எதிர்த்துப் போரிட முடியாத சிடி 4 (CD4) என்ற வெள்ளை இரத்த அணுக்கள் குறைவாக உள்ள ஹெச்ஐவி நோயாளிகளிடம் இந்நோய் காணப்படுகிறது. இரண்டு நிமிடங்கள் புளூரைடு கலந்த  பற்பசையால் தினமும் இரண்டு முறை  பல் துலக்கவேண்டும். நாக்கு வழிப்பானை  அதிக அழுத்தத்துடன் அதிக தடவை பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு செய் யும்போது பாப்பிளிகள் விரிவடையும். இத னால் நாக்கு இரத்த சிவப்பு அல்லது  வெள்ளையாக மாறும். நாக்கு பற்றிய  அறிவு நம் வாழ்வை ஆரோக்கியமுடை யதாக்கும். வாய் ஆரோக்கியமே வாழ்வின்  ஆரோக்கியம் என்பதை உணர்ந்து செயல்  படவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.