tamilnadu

img

சிஐடியு 17ஆவது அகில இந்திய மாநாடு:

சிஐடியு அகில இந்திய மாநாடு பெங்களூரு வில் ஜனவரி மாதம் 18ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த  மாநாட்டிற்கான தயாரிப்புகள் முழு வீச்சில் நடை பெற்றுவருகின்றன. இந்நிலையில் மாநாட்டை யொட்டி 7 நிமிட சவால் சூப்பர் - குறும்படப் போட்டி 2023க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது அகில இந்திய  அளவிலான போட்டியாகும். 7 நிமி டங்கள் ஓடக்கூடிய குறும்படமாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் குறும்படம் மாநாட்டையொட்டி நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் திரையிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுக்கு வருவாய் பகிர்வு என்ற அடிப்படை யில்  விஒடி விநியோக சேவையும் செய்துதரப்படும்.   முதலில், இந்த குறும்படம் சிஐடியு திரைப்பட விழா மற்றும் விருதுகளுக்காக தகுதி  வாய்ந்ததா என்று மதிப்பீடு செய்யப்படும். இரண்டா வதாக, குறும்படம் விருதை வென்றதா இல்லையா அல்லது திரைப்பட விழாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதா இல்லையா என்பதைப்  பொருட்படுத்தாமல், வருவாய் பகிர்வு அடிப்படை யில்  படத்தை விஒடி விநியோகத்திற்காக மதிப்பீடு செய்யப்படும். வருவாய் பகிர்வு அடிப்படையில் விஒடி விநியோகத்தின் சலுகையை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ விண்ணப்பதாரருக்கு விருப்பம் உள்ளது.

திரைப்படப் போட்டி

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தனது 17ஆவது அகில இந்திய மாநாட்டை பெங்களூரு அரண்மனை மைதானத்தில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம்தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.  இதன் ஒரு பகுதியாக குறும்படப் போட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிஐடியு திரைப்பட விழா

 அகில இந்திய மாநாட்டிற்கு முன்னதாக பெங்களூருவில் ஜனவரி மாதம் திரைப்பட ஆர்வலர்களுக்காக போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட குறும்படங்களின் திருவிழா நடைபெறும். சிஐடியு 17ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு போட்டியின் முதல் பரிசு பெற்ற சிறந்த திரைப்படம் மற்றும் இரண்டாவது பரிசுபெற்ற  சிறந்த திரைப்படம் திரையிடப்படும்.

விருதுகள்

சிறந்த குறும்படத்திற்கு விருதுடன் ரூ.50,000 ரொக்கப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படும். இரண்டாவது சிறந்த குறும்படத்திற்கு  விருதுடன் ரூ.30,000 ரொக்கப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.  பார்வையாளர்கள் பிரிவில் ஒரு விருது, சான்றிதழுடன் ரூ.10,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும். 

நுழைவுக் கட்டணம்

 நுழைவுக் கட்டணமாக ரூ.1000/- சிஐடியு 17வது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு, பெங்களூரு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். பணம் செலுத்தப்பட்டதற்கான விவரங்கள் நுழைவுப் படிவத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

மின்னணு பரிமாற்ற விவரங்கள் பின்வருமாறு

CITU 17th all India Conference Reception Committee,
 Bengaluru  Canara Bank, Sampangi Rama Nagara Branch  
S.B. Account No.110065823710  
IFSC: CNRB0001175  
MICR:560015049  

படங்களுக்கான கருபொருள்:

சமகால இந்தியாவின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைமை ஆகியவையே இந்த சூப்பர் குறும்படத்திற்கான கருபொருளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  ஆனால் இவை மட்டும் அல்ல,  தொழிலாளர்கள், விவசாயிகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அவர்கள் தொடர்பான போராட்டங்கள் தொடர்பானவையாகவும் இருக்கலாம். குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான சிக்கல்கள் திட்டப் பணியாளர்கள் தொடர்பான பிரச்ச னைகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் புதிய கல்விக் கொள்கை தொடர்பான சிக்கல் கள் தலித், ஆதிவாசி மற்றும் சிறுபான்மை சமூகங்கள் தொடர்பான பிரச்சனைகள் மதநல்லிணக்கம் தொடர்பான பிரச்சனைகள் சுற்றுச்சூழல், சூழலியல் மற்றும் புவி வெப்பமடைதல் தொடர்பான சிக்கல்கள் இந்திய மொழிகள் மற்றும் மொழிக் கொள்கை கள் தொடர்பான சிக்கல்கள் எல்ஜிபிடிக்யூ தொடர்பான சிக்கல்கள் ஆகி யவை தொடர்பாகவும் இருக்கலாம். அனுப்பப்ப டும் குறும்படங்கள் பின்வரும் தொழில்நுட்ப தேவையை கொண்டதாக இருக்கவேண்டும். 

Technical requirement:  
Resolution: 1920x1080 HD  
Aspect ratio: 16:09 / 2k  
File format: .mov / .mp4  
FPS: 24 / 25  
Sound: Stereo 2.1 or above

உங்கள் திரைப்படத்தைப் பதிவேற்றுதல்:   உங்கள் படத்தை உங்கள் கூகுள் டிரைவ் அல்லது போட்டி குழுவினரிடம் பதிவு செய்யப்பட்ட உங்களது  மின்னஞ்சல் முகவரியிலிருந்து  பதிவேற்றம் செய்யவேண்டும். உங்களது டிரைவ்-இல் உங்களது குறும்படம் தொடர்பான இணைப்பை (Link)  உருவாக்கவும். உங்கள் கோப்பை அணுக கடவுச்சொல்லை (Password) உருவாக்கவும்.  இணைப்பு மற்றும் கடவுச்சொல்லை sfc.citu@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் பெங்களூரைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்கள் படங்களை பென் டிரைவில் சமர்ப்பிக்கலாம். உங்கள் படத்தின் பெயர் தெளி வாகப் பதிக்கப்பட்ட லேபிளை பென் டிரைவில் ஒட்ட வேண்டும். 

CITU Film Contest, #121, 11th Main, 
9th Block, Nagarabhavi 2nd Stage, Bengaluru  560072. 
Mob: 9448772067

என்ற முகவரிக்கு பென் டிரைவை அனுப்பவும்.  சிடி,டிவிடியில் பதிவு செய்து அனுப்பப்படும் குறும்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட் டாது. அனுப்பப்படும் பென் டிரைவும் திருப்பித் தரப்படமாட்டாது. 

விதிமுறைகள்

திரைப்படங்களின் நீளம்:  குறைந்தபட்சம் 1 நிமிடம் முதல் அதிகபட்சம் 7 நிமிடங்கள். 7 நிமிடங்க ளுக்கு மேல் நீளமான படங்கள் விருதுகளுக்கு பரிசீலிக்கப்படாது.  தகுதியற்ற திரைப்படங்கள் : ஆவணப் படங்கள், செய்திக் காட்சிகள், சீரியல்கள், டிவி ஷோ கிளிப்பிங், பெரிய படத்தின் பகுதி ஆகியவை தகுதியற்றவை. இருப்பினும், அதிகபட்சம் 1 நிமிடம் சம்பந்தப்பட்ட ஆவணப்படக் காட்சிகள் படத்துடன் பின்னிப் பிணைந்து இருக்கவேண்டும்.   தயாரிப்பு ஆண்டு: திரைப்படங்கள் 2022  ஆண்டில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.  திரைப்படங்களின் மொழி: ஆங்கிலம் உட்பட இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் ஏற்றுக்கொள்ளப்படும். ஆங்கில மொழிப் படங்கள் உட்பட அனைத்துப் படங்களும் ஆங்கிலத்தில் வசன வரிகளைக் கொண்டிருக்க வேண்டும். குறும்படங்களை சமர்பி ப்பதற்கான கடைசி தேதி: டிசம்பர் 31, 2022. முறையாக கையொப்பமிடப்பட்டு  சமர்ப்பிக்கப் படும்  நுழைவுப் படிவம் பின்வரும் விதிகளை ஏற்றுக்கொள்வதாக இருக்கவேண்டும்.

1. முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட நுழைவுப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
2. கட்டண விலக்கு இல்லை. அனைத்து நுழை வுக் கட்டணங்களும் திரும்பத் தரப்படாது.
3. சிஐடியு 7 நிமிட சவால் சூப்பர்-குறும்படப் போட்டி 2023 உங்கள் படத்தின் சில பகுதிகளை (டிரெய்லர்/டீசர்/பட போஸ்டர்/ஸ்டில்ஸ் உட்பட) விளம்பர நோக்கத்திற்காகப் பயன்படுத்தலாம். (அதிகபட்சம் 1 நிமிடம்).
4. படத்தின் அனைத்து உரிமைகளும் உங்களுக்கே சொந்தம்.
5. ஒரு விண்ணப்பதாரர் எத்தனை உள்ளீடுகளை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். இருப்பினும், ஒவ்வொரு படத்திற்கும் தனித்தனியாக நுழைவுப் படிவம் மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
6. போக்குவரத்தின் போது தாமதமாக வந்தவர்கள் மற்றும் இழப்புகளுக்கு பொறுப்பேற்க முடியாது. பென் டிரைவ்கள் திருப்பித்தரப்படமாட்டாது.
7. கடைசித் தேதிக்குப் பிறகு வரும் நுழைவுப் படிவங்கள் மற்றும் திரைப்படங்கள் போட்டிக்கு பரிசீலிக்கப்படாது.
8. திரைப்பட விழா குழுவினர், திரைப்பட விழா மற்றும் விருது வழங்கும் தேதி, இடம் ஆகியவற்றை   மறுதேதியில் நடத்தவோ அல்லது ரத்துசெய்யவோ,  விஓடி விநியோக சேவை தொடர்பாக உங்களிடம் ஒப்புதல் பெற்றோ அல்லது பெறாமலோ மாற்றவும், ரத்துசெய்யவும் உரிமை உண்டு.
  9. அதிகாரப்பூர்வ தேர்வு குறித்த அறிவிப்புக்குப் பிறகு உங்கள் படைப்பை திரும்பப் பெற முடியாது.
 10. திருவிழாவில்  திரையிட கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
11. திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை நேரலையில் திரையிடுவோம். விழாவில் தேர்வு செய்யப்படும் படங்களில் இருந்து விருதுக்குரிய படங்கள் முடிவு செய்யப்படும்.
12. நடுவர் குழுவின் முடிவுகள் இறுதியானவை மற்றும் அனைவருக்கும் கட்டுப்பட்டவை. இந்த விஷயத்தில் எந்த கடிதப் பரிமாற்றமும் செய்யப்பட
மாட்டாது. 
13. உங்கள் படைப்பாற்றலை மேம்படுத்துவதே எங்களது குறிக்கோள். இந்த விழாவில் கலந்துகொள்ள பதிவு செய்வதன் மூலம், உங்களது படைப்புகளை பத்திரிகைகள் மற்றும் இதர ஊடகங்களில்  விளம்பரப்படுத்தவும், விநியோகிக்கவும் எங்களுக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். உங்களது குறும்படம் யாருடனும் அல்லது எந்த நிறுவனத்துடனும் முழுமையாகப் பகிரப்படாது.
14. பயன்படுத்துவதற்கான  உரிமைகள் விண்ணப்பதாரர்  தனது  படத்தின் அனைத்து எதிர்மறை உரிமைகளையும் வைத்திருப்பதாக  அறிவித்து உத்தரவாதம் அளிக்கவேண்டும்.  திரைப்படத்தைப் பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உரிமைகளும் அவர் அல்லது அவளுக்கு உண்டு;.இந்தப் போட்டியில் நுழைவுப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான சூழலில் அவர் அல்லது அவள் சட்டப்பூர்வ நிலையில் இருக்கிறார். இந்தப் 
போட்டியின் பின்னணியில் படத்தைப் பயன்படுத்துவதன் மூலம், படத்தில் சித்தரிக்கப்பட்ட நபர்கள் உட்பட மூன்றாம் தரப்பினரின் உரிமைகள் மீறப்படாது என்று பங்கேற்பாளர் உத்தரவாதம் அளிக்கிறார். இந்த உட்பிரிவுகள் / பதிப்புரிமை சட்டங்களை மீறும் எந்தவொரு விண்ணப்பதாரரும் அல்லது திரைப்படமும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். சிஐடியு குறும்படபோட்டி,  குறும்பட திருவிழா மற்றும் இந்த நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ள நபர்கள்எந்தவொரு சட்ட நடவடிக்கைக்கும் பொறுப்பேற்கமாட்டார்கள்.
15. குறும்பட விழாவில் பதிவு செய்வதன் மூலம் நீங்கள் அனைத்து விதிகளையும் விதிமுறை களையும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

- கேசரி ஹராவோ
போட்டி மற்றும் விழா இயக்குனர்