தஞ்சாவூர், மார்ச்.6- தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில், இதுவரை சுவடிகள், நூல்கள் என 50 லட்சம் பக்கங்கள் டிஜிட்டலாகியுள்ளது. தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம் ஆசியாவின் மிகப்பழமை யான நூலகங்களுள் ஒன்று. இந்த நூலகம், கி.பி.1531-1675 வரை ஆண்ட தஞ்சை நாயக்க மன்னர் களின் அரசாங்க நூலகமாக ஆரம்பிக்கப்பட்டது. கி.பி.1675 ஆம் ஆண்டு தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களும் இந்நூலகத்தை பாதுகாத்து வந்தனர். மராட்டிய மன்னர்களில் சரபோஜி மன்னரை நினைவுகூறும் விதமாக இந்நூலகத்திற்கு சரபோஜி சரஸ்வதி மஹால் நினைவு நூலகம் என பெயா் சூட்டப்பட்டது. இந்த நூலகத்தில் அரியவகை ஓலைச்சுவடிகள், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவை சார்ந்த பிறமொழி காகிதச் சுவடிகளிலும் உள்ளன. இங்கு 30,433 சமஸ்கிருத மற்றும் பிறமொழி ஓலைச்சுவடிகளும், 6,426 அரிய வகை புத்தகங்களும் உள்ளன.
இந்த நூலகத்தில், 2015 ஆம் ஆண்டு முதல் அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள் ஆகியவற்றை டிஜிட்டல்மயமாக்கும் (மின்னுரு வாக்கம்) பணி நடந்து வருகிறது. இத்திட்டத்துக்குத் தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 7.50 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. இத்திட்டத்தைக் கண்காணித்து தரக்கட்டுப்பாடு செய்யும் பணியைத் தமிழ் இணைய கல்விக் கழகம் செய்து வருகிறது. இதன்படி, இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமான சுவடிகள், நூல்களின் பக்கங்கள் டிஜிட்டல்மய மாக்கப்பட்டு, இவை அனைத்தும் தமிழ் இணையக் கல்விக்கழக பிரிவின் (www.tamildigitallibraray.in) தமிழிணையத்தின் மின்னூலகத்தில் டிஜிட்டலாக பதவியேற்றம் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை சரஸ்வதி மஹால் நூலகத்தில் நடை பெறும் பணிகளை பார்வையிட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பணிகளை விரைந்து முடிக்குமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது உதவிப் பொறியாளர் அறச்செல்வி, வட்டாட்சியர் மணி கண்டன் மற்றும் அலுவலர்கள் உடனி ருந்தனர்.