tamilnadu

img

40 ஆண்டுகளாக கிடைக்காத மின் இணைப்பு விவசாயி தற்கொலைக்கு முயற்சி

புல்தானா:
விண்ணப்பித்து 40 ஆண்டுகளாகியும் மின்இணைப்பு வழங்கப்படாத விரக்தியில் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் புல் தானா மாவட்டத்திற்கு உட்பட்டது வடோடா என்ற குக்கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் கராத்தே என்பவர் கடந்த 1980-ஆம் ஆண்டு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் 40 ஆண்டுகளாகியும் அவருக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே மின் இணைப்பு கேட்டிருந்த ஸ்ரீராம் கராத்தேயும் இறந்தே போனார்.
இந்நிலையில்தான், தங்கள் வீட்டிற்கு, மின் இணைப்பு வழங்கப்படாததால், விரக்தியடைந்த ஸ்ரீராம் கராத்தேயின் பேரன் ஈஸ்வர்கராத்தே, புல்தானா மாவட் டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தற்கொலை முயற்சி குறித்து, பேட்டி அளித்துள்ள விவசாயி ஈஸ்வர் கராத்தே, “மின்சார இணைப்பு கோரிஎனது தாத்தா கடந்த 1980-ஆம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். 40 ஆண்டுகளாகியும் தற்போதுவரை மின்சாரஇணைப்பு வழங்கப்படவில்லை. இதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப் பட்டும் பலனில்லாமல் போனதால், தற்கொலை முடிவுக்கு வந்தேன்” என்று கூறியுள்ளார்.

;