tamilnadu

img

செங்கத்தில் மகளிர் தின கருத்தரங்கம்

திருவண்ணாமலை, மார்ச் 7- திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்  தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்  கூட்டணி சார்பில் மகளிர் தின கருத்தரங்கம்  இரா.மாலா தலைமையில் நடைபெற்றது “இயக்கத்தை இயக்கும் பெண்கள்” என்ற  தலைப்பில் மாநிலத் தலைவர் மூ.மணி மேகலையும், “சம காலத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள், வீட்டில் சமூகத்தில்” என்ற தலைப்பில் எழுத்தாளர் நடிகர் பவா செல்லதுரையும் பேசினர்.  மாநில பொருளாளர் ஜோதிபாபு, மாவட்  டத் தலைவர் சி.அ.முருகன், செயலாளர் அந்தோணிராஜ், பொருளாளர் கோ.வேங்கட பதி, மாநில செயற்குழு உறுப்பினர் டேவிட்ரா ஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக வெ.பவானி வரவேற்றார். தே. டெய்சி அறச்செல்வி நன்றி கூறினார்.