tamilnadu

கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தனியார் கான்கிரீட் கலவை ஆலையை அப்புறப்படுத்துக! விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

தரங்கம்பாடி, ஜூலை 5-  அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளுக்கு மணல் கிடைக்காத நிலை யில் கொள்ளிடம் ஆற்றில் அனுமதி யின்றி கான்கிரீட் மிக்ஸிங் ஆலை அமைத்து மணல் எடுக்கும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.  தஞ்சை, நாகை, மாவட்டங்களில் தெற்குராஜன் ஆறு மற்றும் கும்கி மண்ணி ஆறு ஆகியவற்றில் அடித்த ளம், பக்கவாட்டு சுவர் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஈரோ ட்டை சேர்ந்த ‘அன்னை இன்பரா’ என்கிற  தனியார் கட்டுமான நிறுவனம் மேற்கொ ண்டு வருகிறது. டெல்டா பகுதியில் ரூ.54 கோடி மதிப்பிலான பணிகளை பெற்றுள்ள ஒப்பந்த நிறுவனம் மயிலாடுதுறை அருகே குமாரமங்கலம் கிராமத்தில் கொ ள்ளிடம் ஆற்று படுகையின் உள்ளே கான்கிரிட் மிக்ஸிங் ஆலையை அமை த்துள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு தேவையான மணலை ஆற்றில் இருந்தே எடுத்து கான்கிரீட் கலவையாக தயார்  செய்து அனைத்து கட்டுமான பணிக ளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். மணல் தட்டுப்பாடு காரணமாக சாமா னியர்களின் வீடு மற்றும் தனியார் கட்ட டங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளும்  தடைபட்டுள்ள நிலையில் அரசு கட்டு மான பணிகளும் மணல் இல்லாமல் எம். சாண்ட் மூலமே நடைபெற்று வருகிறது. தனியார் யாரேனும் கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுத்தால் வாகன ங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதிக அப ராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் பொதுப் பணித்துறை  கட்டுப்பாட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தனியார் கட்டுமான நிறுவனம் கான்கிரீட் மிக்ஸிங் ஆலையை அமைத்து இரவு, பகலாக மணலை எடுத்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து பலமுறை புகார்  தெரிவித்தும் இதுவரை எந்த நடவடி க்கையும் எடுக்காமல் இருப்பதுடன், தனி யார் நிறுவனத்திற்கு ஆதரவாகவே பொதுப் பணித்துறை அதிகாரிகள் செய ல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டு கின்றனர்.  அரசு மணல் குவாரியால் குடிநீர் ஆதாரமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படு வதாக கூறி போராடி வரும் மக்கள், ஆற்றிலேயே ஆலை இயங்கி வருவ தால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டமும்  பாதிக்கப்படும் எனவும் கவலை தெரி விக்கின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம்  தலையிட்டு அன்னை இன்பரா தனி யார் கட்டுமான நிறுவனத்தின் கான்கி ரீட் மிக்ஸிங் ஆலையை கொள்ளிடம் ஆற்றிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;