tamilnadu

img

ஆசிரியர் மாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு

திருவள்ளூர், ஜூன் 25-   நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் பாபுவை  பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து மாண வர்கள் வகுப்புகளை  புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள நத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இதில் 83 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உட்பட 6-ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.  இங்கு ஆங்கில ஆசிரியராக பாபு  2016 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இவர் 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்க ளுக்கு ஆங்கில பாடத்தை எளிமையாகவும், புரியும் படியும் நடத்துவதால் 3 ஆண்டுளில்  கல்வித் தரம் உயர்ந்தது. மேலும் மாணவர்கள் பாபு மீது நேசத்துடன் பழகினர்.  இந்நிலையில் ஆசிரியர் பாபு ஜூன் 6 ஆம் தேதி  பணிமாற்றம் செய்துள்ளனர். இத்தகவல் பெற்றோர்களுக்கு தெரிந்தவுடன் பணி மாறுதல் ரத்து செய்ய வேண்டும் என திருவள்ளூரில் உள்ள முதன்மைக் கல்வி அதிகாரிக்கு கல்விக் குழு சார்பில் மனு அளித்துள்ளனர். ஆனால் எவ்வித மாற்று நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனைத்  தொடர்ந்து செவ்வாயன்று (ஜூன் 25)  மாண வர்கள்  வகுப்புக்களை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.  இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார கல்வி அலுவலர் பூவராகவ மூர்த்தி, பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர் ரவி ஆகியோர் மாணவர்களுடன் பேச்சு நடத்தினர்.  அப்போது அதிகாரிகள், புதன்கிழமை முதல் ஆசிரியர் பாபு நத்தம் பள்ளியில் தொடர்ந்து பணியாற்றுவார் எனக் கூறினர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் வகுப்புக்குச் சென்றனர்.

;