மண்ணச்சநல்லூர், ஜூலை 4- திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளி களுக்கான ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மறு வாழ்வு திட்ட பிசியோதெரபி மருத்துவர் ரமேஸ் வரவேற் றார். பூர்ணோதயா சிறப்பு பள்ளி தாளாளர் கலையரசி முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் கலந்து கொண்டார். முன்னதாக அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தனலெட்சுமி(பொ) முகாமை துவக்கி வைத்தார். மண்ணச்சநல்லூர் சிறப்பு பள்ளி ஆசிரியைகள் கனகலெட்சுமி, கலைச்செல்வி, நித்யா உள்ளிட்டோர் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இரு நூற்று எண்பது மாற்றுத்திறனாளிகள் முகாமில் பயன டைந்தனர். மேலும் உபகரணங்கள், கல்வி உதவி தொகை, கடனுதவி வழங்குவதற்கும் விண்ணப்பங்கள் வழங்கப் பட்டன. மேலும் இதுபோல் மாவட்டத்தில் ஒன்பதாம் தேதி லால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பதினோறாம் தேதி மணிகண்டம், பன்னிரெண்டாம் தேதி மணப்பாறை, பதினாறாம் தேதி முசிறி, பதினெட்டாம் தேதி மருங்காபுரி, பத்தொன்பதாம் தேதி அந்தநல்லூர், இருபத்து முன்றாம் தேதி உப்புலியபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெறுகிறது.