சீர்காழி, ஜூன் 3- சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் உழவர் சந்தை எதிர்புறம் உள்ள தனி யார் ஸ்வீட் கடை முன்பு பல ஆண்டு காலமாக திறந்தே கிடக்கும் சாக்கடை கால் வாயை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா புதிய பேருந்து நிலை யம் அருகில் உழவர் சந்தை க்கு எதிர்புறம் உள்ள தனி யார் ஸ்வீட் கடைக்கு எதிர்ப் புறம் பல ஆண்டு காலமாக திறந்தே கிடக்கும் சாக்கடை கழிவுநீர் கால்வாய் திறந்தே இருப்பதால் ஸ்வீட் கடைக்கு வரும் நுகர்வோர்கள், பொ துமக்கள், முதியவர்கள், மாணவ, மாணவிகள் சாக்க டையை தாண்ட முயற்சிக் கும் போது சில பேர் தடு மாறி விழுந்து விடுகிறார்கள். ஆகையால் உடனடியாக சம்பந்தப்பட்ட சீர்காழி நக ராட்சி நிர்வாகம் திறந்தே கிடக்கும் கழிவுநீர் சாக்க டையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக் கையாக உள்ளது.