tamilnadu

img

ரூ.7000 கோடி சம்பளம், ஓய்வூதியம், சலுகைகள் ஓணக் காலத்தில் விநியோகம்:முதல்வர் அறிவிப்பு

திருவனந்தபுரம், ஆக.28- ஓணம் பண்டிகையை யொட்டி சம்பளம், ஓய்வூதி யம் மற்றும் பிற சலுகைக ளுக்காக ரூ.7,000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். சம்பளம், போனஸ், பண் டிகை சலுகைகள், முன் பணம் என மொத்தம் ரூ. 2304.57 கோடி வழங்கப் பட்டது. பணியாளர் ஓய்வூதி யம் ரூ.1545 கோடி, சமூக பாது காப்பு ஓய்வூதியம் ரூ.1170.71 கோடி, நலவாரிய ஓய்வூதி யம் ரூ.158.85 கோடி, ஓணப் பைகள் ரூ.440 கோடி, நெல் சேமிப்பு ரூ.710 கோடி, ஓணத் துக்கான உணவுப்பொருட் கள் 112 கோடி, நுகர்வோர் மத்திய வங்கி ரூ.35 கோடி, சம்பளம், ஓய்வூதியம், பணிக்கொடை, நிலுவைகள் போன்றவற்றுக்காக கே. எஸ்.ஆர்.டி.சி.க்கு வழங்கி யது ரூ.140.63 கோடி, ஆஸா தொழிலாளர்களுக்கு ரூ.76.42 கோடி, பள்ளி சீருடைகள் ரூ.30 கோடி என்டோசல்பான் துயரத் தில் சிக்கியோர், அங்கன் வாடி ஊழியர்கள், மூடப் பட்ட தொழில் நிறுவனங்க ளுக்கான உதவி, பொதுத் துறை நிறுவனங்களுக்கான உதவி போன்ற அனைத்துக் காகவும் ரூ.7,000 கோடிக்கும் அதிகமான தொகை விநி யோகம் செய்யப்பட்டுள் ளது. மூடப்பட்ட முந்திரி தொ ழிற்சாலைகளின் தொழிலா ளர்களுக்கு ஊக்கத்தொகை யாக தலா ரூ. 2000 மற்றும் 10 கிலோ அரிசியை விநியோ கிக்க ரூ.5.32 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் கூட் டத்தில் முதல்வர் தெரிவித்தார்.