tamilnadu

மாணவர்களுக்கு புத்தூர் அரசுக் கல்லூரி அழைப்பு

 சீர்காழி, ஆக.4- மயிலாடுதுறை மாவட்டம் புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் தமிழரசி வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், மயிலாடுதுறை மாவட்ட மாணவர்கள் பொறியியல் பட்ட ப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும்  வகையில் புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நு ட்பக் கல்லூரி ‘இ’ சேவை மையமாக இருந்து வருகிறது.  அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல், கணினிஅறிவியல் ஆகிய நான்கு பாடப்பிரிவுகளிலும் தலா 120  மாணவர்கள் வீதம் மொத்தம் 480 பேர் சேர்த்துக் கொள்ளப் பட உள்ளனர். முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேர விரு ம்பும் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள்  இணைய தளத்தில் ஆக.4  வரை விண்ணப்பங்களை பதி வேற்றம் செய்யலாம். இணைய தளம் வாயிலாக பதிவேற்றம்  செய்ய முடியாதவர்கள் இப்பயிலகத்திற்கு நேரடியாக வந்து  ‘இ’ சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதா ரர்கள் தங்களது சான்றிதழ்களை ஆக.5 முதல் ஆக.16  வரை பதிவேற்றம் செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.

;