tamilnadu

img

சிறப்பு முகாம் என்ற பெயரில் அரசு அலுவலர்கள் அலைக்கழிப்பு

 மாற்றுத்திறனாளிகள் கொதிப்பு 

மதுராந்தகம், ஜன. 7- சிறப்பு முகாம் என்ற பெயரில்  மாற்றுத்திறனாளிகளை அலைக்க ழித்த மாற்றுத் திறனாளிகள் கோட்  டாட்சியரை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மது ராந்தகம், செய்யூர் வட்டங்களுக்குட் பட்ட கிராமங்களைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செவ்வா யன்று (ஜன 07) கோட்டாட்சியர் தலை மையில் பல்நோக்கு சிறப்பு மறு வாழ்வு முகாம் நடைபெறும் என்றும்  அம்முகாமில் மருத்துவ குழு வினரை வரவழைத்து மாற்றுத்திற னாளிகளுக்கு அடையாள அட்டை கள் வழங்கப்படும் மாற்றுத் திறனாளி களுக்கான அட்டைக்கான கணினி  பதிவு, கால் இழந்துள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் சர்வ தேச தரம் வாய்ந்த அதிநவீன  செயற்கை அவயங்களுக்கு அளவீடு கள் எடுக்கப்படவும்,வங்கி கடன் விண்ணப்பங்கள் உடனுக்குடன் வங்கிகளுக்குப் பரிந்துரைக்கவும் ஆவின் விற்பனை மையத்திற்கான மூலப்பொருட்கள் வாங்க ரூ.50000 மானியம் வழங்கப் பரிந்துரைத்தல் அனைத்து திட்டங்களுக்கு விண்  ணப்பங்கள் பெறுவது , பேசும் திற னற்றவர்களுக்கு பேச்சுப்பயிற்சி அளித்தல், ஆதார. அட்டை, முதல மைச்சர் காப்பீடு அட்டை,தொழில் பயிற்சி சேர்க்கை மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு நலத்திட்டங்களைப் பெற்றுக் கொள்ளலாம்  என மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவ லகத்தின் சார்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. 

 இந்த தகவலின் அடிப்படையில் இரண்டு வட்டங்களைச் சார்ந்த ஏராள  மான மாற்றுத் திறனாளிகள் மதுராந்த கம் வந்திருந்தனர். எந்த திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறும் என  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரி விக்கப்படாததால் அவர்கள் பரி தவித்தனர். இந்நிலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான  சங்கத்தின் சார்பில் மாநில துணைத் தலைவர் பாரதிஅண்ணா, மாவட்டச் செயலாளர் வி.அரிகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகி வள்ளிகண்ணன் ஆகியோர் தலைமையில்  அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மதுராந்தகம் கோட்டாட்சியர் அலு வலகத்திற்குச் சென்று போராட்டத்தில்  ஈடுபட்டனர்.   தகவல் அறிந்துவந்த  கோட்டாட்சியரின் நேர்முக உதவியா ளர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல  அலுவலர் சுப்பிரமணி ஆகியோர்  வருத்தம் தெரிவித்து பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டார். மேலும் வருகின்ற ஜன வரி 13 அன்று மதுராந்தகத்தில் மாவட்ட  ஆட்சியர் தலைமையில் மீண்டும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என உறுதி யளித்தன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

;