tamilnadu

img

மாநாகராட்சிப் பள்ளி துரோணா பாடசாலையா?

திருப்பூர், ஜூன் 25– திருப்பூர் மாநகராட்சிப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் புதிய வகுப்பறை கள் கட்டப்பட்ட நிலையில் இப்பள்ளிக்கு துரோணா பாடசாலை என பெயர் மாற் றப்பட்டது பொதுமக்கள் மத்தியில்  கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இப்பெயரைமாற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் ராயபுரம் பகுதியில் மாநக ராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. திருப்பூர் பிரைம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.75 லட்சம் நிதி உதவியுடன் புதிய வகுப்பறைகள் கட்டப் பட்டு இப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது. இப்பள்ளிக்கு திடீரென துரோணா பாட சாலை என புதிதாக பெயர் வைக்கப்பட்டு, திறப்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிலையில் துரோணா பாடசாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி என பெயர் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராயபுரம் பகுதி பொதுமக்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்துள்ளனர்.

;