tamilnadu

img

பொங்கல் பண்டிகை காய்கறி, பூக்கள் விலை உயர்வு

சென்னை, ஜன. 11- கோயம்பேடு சிறப்புச் சந்தை யில் பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பூஜை பொருட்கள், காய்கறிகள், விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. வழக்கத்தைவிட இந்த வருடம் பொருட்கள் விலை உயர்வாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சிறப்புச் சந்தையில் கரும்பு, பொங்கல் பொருட்கள் குவிந்துள்ளன. 8-ந்தேதி  முதல் செயல்பட்டு வரும் சிறப்புச்  சந்தையில் பொங்கல் பண்டி கைக்குத் தேவையான பூஜை பொருட்கள், காய்கறிகள், விற் பனை செய்யப்பட்டு வருகின்றன. வழக்கத்தைவிட இந்த வருடம் பொருட்கள் விலை உயர்வாக உள்ளது. மஞ்சள் கொத்து ஒரு ஜோடி ரூ.35  முதல் ரூ.60 வரை, வாழைக்கன்று கள் ஒரு ஜோடி ரூ.50, சாமந்தி பூ ஒரு முழம் ரூ.30, கதம்பம், கனகாம்பரம், மல்லி ஆகியவை ஒரு முழம் தலா ரூ.35க்கு விற்கப்படுகின்றன.கோயம்பேடு பூ சந்தைக்குத் தமிழகத்தின் சேலம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளிலிருந்தும் பெங்களூர், ஓசூர் மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. பொங்கலை முன்னிட்டு பூக்க ளின் விலை கடுமையாக உயர்ந்துள்  ளது. ஒரு கிலோ ரூ.1000க்கு விற்  பனை செய்யப்பட்டு வந்த மல்லி  ரூ.1,500க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று மேலும் விலை உயர்ந்து ரூ.2,100 வரை விற்பனை செய்யப் பட்டு வருகிறது. ரூ.400முதல் ரூ.500 வரை விற்று வந்த ஜாதிமல்லி ரூ.700 க்கும், ரூ.600க்கு விற்ற முல்லை  ரூ.900க்கும், ரூ.40க்கு விற்ற சாமந்தி ரூ.100க்கும், ரூ.80க்கு விற்ற பன்னீர் ரோஸ் ரூ.150க்கும், ரூ.300க்கு விற்ற  கனகாம்பரம் ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

நாளை மேலும் விலை உயரும்

இந்த விலை உயர்வு குறித்து பூ  வியாபாரி ஒருவர் கூறுகையில், கோயம்பேடு சந்தையில் விற்ப னைக்கு வந்துள்ள மஞ்சள் கொத்து  சாமந்தி பூ வரத்து அதிகம் காரண மாக விலை பெரிய அளவில் உயர வில்லை. ஞாயிறு மற்றும் திங்கள், செவ்வாயன்று பூக்கள் விலை மேலும் அதிகரிக்கும் என்றார். பூசணிக்காய் கிலோ ரூ.20 முதல்  ரூ.30க்கும், தேங்காய் ஒன்று சிறியது  ரூ.10க்கும், பெரியது ரூ.25க்கும் விற்கப்படுகிறது இலை, ஆவாரம் பூக்கள் கொண்ட கொத்து ரூ.10,  அறுகம்புல் கட்டு ரூ.5, வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.40, ஒரு தார் ரூ.300, தென்னை ஓலை தோரணங்கள் கொத்து ரூ.10-வாழை இலை ரூ.5க்கு விற்கப்படுகின்றன. சிறுவர்களுக்கான போகி மேளம்  ரூ.30 முதல் ரூ.100 வரை விற்கப்படு கிறது. சர்க்கரைவள்ளி கிழங்கு, கரு ணைக் கிழங்கு ஒரு கிலோரூ.40, மொச்சைக்காய், துவரைக்காய் தலா ரூ.50 என விற்பனை செய்யப்படு கிறது. கரும்பு விளைச்சல் அதிகம் காரணமாக வரத்து அதிகரித்து விலை  குறையும் என்று எதிர் பார்க்கப்படு கிறது. ஆனாலும் இப்போது ஒரு  கட்டு ரூ.300க்கு விற்பனை செய்யப் படுகிறது.
 

;