சேலம், அக்.10- சேலம் சோனா கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான சோனா ஸ்டாருடன் பெஸ்டோ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெஸ்டோ நிறுவனம் தன்னை இணைத்துக்கொண்டு நீண்டகால கூட்டுறவு மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க விருப்பம் தெரி வித்துள்ளது. மேலும் மெக்கட்ரானிக்ஸ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் மிகச் சிறந்த முழுமையான கற்றல் சூழலை வழங்க இது ஏற்பாடு செய்துள்ளது. பெஸ்டோ நிறுவனம் சகல வசதி களும் கொண்ட பயிற்சி ஆய்வாளர்கள் மற்றும் பயிற்சி பட்டறைகள் நடத்துகின்றன. இப்பயிற்சிக்கு தேவையான வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றை வழங்கும். மேலும் முழு பயிற்சி உள்ளடக்கமும், தொழில்களில் தேவையைப் பூர்த்தி செய்யும். பெஸ்டோ தொழில்துறை ஆட்டோமேஷன் உலகளாவிய நிபுணர்கள் மற்றும் பேஸ்ட் கூறுகளுடன் தொழில்நுட்ப கல்வி வல்லுநர் களைக் கொண்டு இந்த பயிற்சி அளிக்கப்படும். எளிதில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதில் கல்லூரியில் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், காதர் நவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.