tamilnadu

img

பெற்றோர்கள் மறியல் போராட்டம்

மாநில சிலம்பம் போட்டியில் முறைகேடு

தஞ்சாவூர், நவ.11- சிலம்பம், வாள் சண்டைக் கான மாநில அளவிலான தகுதி போட்டியில் வெளிப்படைத் தன்மை கோரி பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் ஞாயிற்றுக் கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், தஞ்சாவூர் மாதாக் கோட்டையில் ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில், சிலம்பம், வாள் சண்டை ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் விளையாட மாணவ- மாணவர்க ளின் தகுதி தேர்வு கடந்த 3 நாட்க ளாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி திருவாரூர், கன்னியா குமரி, சேலம், நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளில் இருந்து மாணவ- மாணவிகள் தங்களது பயிற்சியாளர், பெற் றோர்களுடன் வந்திருந்தனர்.

இந்நிலையில் வெளி மாவட் டங்களில் இருந்து வந்திருந்து போட்டியில் விளையாடும் தங்க ளது குழந்தைகளின் விளையாட் டை பார்க்க பெற்றோர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களை அனுமதிக்கவில்லை என புகார் கள் எழுந்தன. மேலும் போட்டியில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் சென் னையில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்ற தாக அறிவிக்கிறார்கள். போட்டி களின் நடுவர்களாக செயல்படு பவர்களும் அந்த இரண்டு பள்ளி மாணவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள் என்றும் புகார்கள் எழுந்தன. இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள், விளையாட்டு அமைப்பாளர்களிடம் புகார் கூறி யும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதனால் ஆத்திரம டைந்த 100க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி யின் முன்பாக திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது எங்கள் குழந்தைகள் விளையாடுவதை நாங்கள் பார்க்க வேண்டும். அவர்களது பயிற்சியா ளர்களை அனுமதிக்க வேண்டும். விளையாட்டில் நடைபெறும் முறை கேடுகளை தடுக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். தகவல றிந்த வல்லம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சீதாராமன் தலைமையில், காவல்துறையினர் விரைந்து வந்து, மறியலில் ஈடு பட்டவர்களின் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த பின் போ ராட்டம் கைவிடப்பட்டது.