தஞ்சாவூர், நவ.17- காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் தஞ்சைக் கோட்டத்தின் சார்பாக முன்னாள் நிதித்துறை இணைய மைச்சரும், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை சந்தித்து, இன்சூரன்ஸ் பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை நீக்கக் கோரி அவரது ஆத ரவைக் கோரினர். சங்கத்தின் கோரிக் கையை ஏற்றுக் கொண்ட அவர், வரக் கூடிய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுகுறித்து விவாதம் வருகையில் தங்களது கருத்தை வலுவாக முன் வைப்பதாக உறுதியளித்தார். இந்நிகழ்வில் தஞ்சைக் கோட்டத் தின் தலைவர் சே.செல்வராஜ், இணைச் செயலாளர் சரவண பாஸ்கர், துணைப் பொருளாளர் வெங்கடசாமி மற்றும் தஞ்சைக் கிளைச் செயலாளர் செ. ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.