தரங்கம்பாடி, ஆக.24- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரியான கணேசன். இவரது வீட்டில் வளர்த்து வந்த நான்கு கறவை பசுக்கள், ஒரு சினை பசு மாடு மற்றும் ஒரு கன்றுக்குட்டி உள்ளி ட்ட ஆறு கால்நடைகள் சனிக்கிழமை இரவு மர்மமான முறை யில் உயிரிழந்தன. மாடுகள் குடிப்பதற்காக வைத்திருந்த கழனி தண்ணீரில் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதன் காரணமாக உயிரிழப்பு நேர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பொறை யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.