tamilnadu

img

மருத்துவர் லயன் சி.அசோக்குமார் பிறந்தநாள்

மன்னார்குடி, ஜன.22- மன்னார்குடியில் அமைந்துள்ள சிஇசட்எம் பாலிகிளினிக் நிறுவனரும், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியவருமான லயன்ஸ் டாக்டர் சி.அசோக்குமாரின் 70-வது பிறந்தநாளையொட்டி மன்னார் குடி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் டாக்டர் வி.எஸ்.கோவிந்தராஜ், ஆர்.ஜெயக் குமார் மற்றும் நண்பர்கள், ஏராளமான பொதுமக்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இவரது துணவியார் லயன்ஸ் சங்கீதாவும் லயன்ஸ் சங்க நிர்வாகிகளில் ஒருவர்.  தம்முடைய மருத்துவப் பணியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அறுவை சிகிச்சை செய்தும், ஏழை எளியோருக்கு குறிப்பாக நரிக்குறவர் சமூகத்திற்கு கட்ட ணமில்லாமல் இலவசமாக இதுநாள் வரையில் சிகிச்சை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

;