tamilnadu

யூரோலைப் தொழிற்சாலையில் 30 விழுக்காடு சம்பளம் பிடித்தம்

ஆட்சியரிடம் சிஐடியு மனு

செங்கல்பட்டு, ஜூன் 2 - யூரோலைப் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 30விழுக்காடு ஊதியத்தை உடனடி யாக வழங்க வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூன் 2) மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா விடம், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் மனு அளித்தார். அந்த மனுவின் சுருக்கம் வருமாறு:  செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், ஆலத்தூர் தொழிற்பேட்டையில் யூரோ லைப் லைப்கேர் தொழிற்சாலை செயல்படு கிறது. இத்தொழிற்சாலையில் உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுவதால் கொரானா  தொற்று ஊரடங்கு காலத்திலும் செயல் gட்டது. இங்கு 65 நிரந்தர தொழிலாளர்கள் உள்ளிட்டு 200க்கும் மேற்பட்டடோர் பணி புரிகின்றனர். இந்நிலையில், ஏப்ரல் மாதம் பணி செய்த  நிரந்தர தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. எனவே, ஊர டங்கு காலத்தில் பணியாற்றிய தொழிலா ளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்கை  பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில்  கடந்த மாதம் 18ம் தேதி மாவட்ட ஆட்சியரி டம் மனு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழிற்சாலையை ஆய்வு செய்த கிராம நிர்வாக அலுவலர், ஊதி யத்தை  உடனடியாக வழங்கும்படி அறிவு றுத்தினார். இதனையடுத்து கடந்த மாதம்  30ந் தேதியன்று ஊழியர்களின் வங்கிக்  கணக்குகளில் ஊதியத்தைச் செலுத்தியுள்ள னர். 30 விழுக்காடு ஊதியம் பிடித்தம் செய்தது  தெரிய வந்தது. எனவே, பிடித்தம் செய்த 30 விழுக்காடு ஊதியத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

;