tamilnadu

img

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் : 2-வது சுற்றில் சிந்து

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் யோனெக்ஸ் ஓபன் என்ற பெயரில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. 

ஆடவர்

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுபாங்கர் டே இந்தோனே சியாவின் டாமியை 15-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதிரடிக்குப் பெயர் பெற்ற இந்தியாவின் காஷ்யப் ஹாங்காங்கின் கா லாங்கிடம் 11-21, 9-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். மற்றொரு இந்திய நட்சத்திர சமீர் வர்மா ஜப்பானின் நிஷிமோட்டாவிடம் 22-20, 18-21, 18-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். 

மகளிர்

மகளிர் ஒற்றையர் பிரிவில் பார்ம் பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் இந்தியாவின் பி.வி. சிந்து கனடாவின் மிட்செல்லியை 21-15, 21-13 என்ற செட்கணக்கில் பந்தாடி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.