tamilnadu

img

இந்திய ஜோடி அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் யோனெக்ஸ் ஓபன் என்ற பெயரில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது.  இந்த தொடரில் பங்கேற்ற இந்திய  அணி வீரர் - வீராங்கனைகள் அனை வரும் சொதப்ப ஆடவர் இரட்டையர் பிரிவில் ராங்கி ரெட்டி - சிராக் செட்டி ஜோடி மட்டும் தனியாக போராடி இறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியது.  ஞாயிறன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தோனேசியாவின் மார்கஸ் - கெவின் சஞ்சயா ஜோடியை  இந்தியாவின் ராங்கி ரெட்டி - சிராக் செட்டி  ஜோடி எதிர்கொண்டது.  தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  மார்கஸ் - கெவின்  சஞ்சயா ஜோடி 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. தோல்வி கண்டாலும் இந்திய ஜோடி தனது ஆட்டத்திறனில் முன்னேற்றம் கண்டது.
 

;