tamilnadu

img

பெரம்பலூர் அஸ்வின்ஸ் பேக்கரியில் கேக் கண்காட்சி துவங்கியது

 பெரம்பலூர்: பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் பேக்கரி நிறுவனம் சார்பில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஸ்பெஷல் கேக் கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழா துவங்கியது. பெரம்பலூர் அஸ்வின்ஸ் மஹாலில் ஆண்டுதோறும் கேக் திருவிழா நடப்பது வழக்கம். இதனையொட்டி 6ம் ஆண்டு கேக் திருவிழா திங்களன்று துவங்கியது. விழாவிற்கு அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.வி.கணேசன் தலைமை வகித்தார். லயன்ஸ் வரதராஜன் கேக் விற்பனை கண்காட்சியை திறந்து வைத்தார். இணை இயக்குநர் செல்வகுமாரி குத்துவிளக்கேற்றி வைத்தார். அஸ்வின்ஸ் இயக்குநர் அஸ்வின் முதல் விற்பனையை துவங்கி வைக்க அதனை ஊர்க்காவல் படை மண்டல தளபதி அரவிந்தன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் விக்டரி லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் இமயவரம்பன், லயன்ஸ் கிளப் தலைவர் சிவராஜ், மாவட்ட ரெட்டி நல சங்க செயலாளர் சுகுமார், பொருளாளர் கோபிநாத், தம்பு காபிபார் பாலாஜி, மரகதம் மெட்ரிக் பள்ளி தாளாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மேலாளர்கள் அசோக், சூரிக்குமார், மனிதள மேம்பாட்டு அலுவலர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். கேக் திருவிழாவில் புத்தாண்டை முன்னிட்டு புது வகையான ரெயின்போ கேக் 2020 புதிய அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரிச்ப்ளம்கேக் பிளாக்பாரஸ்ட், ஓய்ட் பாரஸ்ட், ரெட் வெல்வட், ஹனிகேக், கலைகேக் மற்றும் பல்வேறு வகையான கேக்குகளை தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கேக் திருவிழா மற்றும் இதர அஸ்வின் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் அன்ட் பேக்கரியில் புத்தாண்டை பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ கேக் ரூ. 330 முதல் ரூ. 600 வரையில் பல்வேறு வகையான கேக்குகள் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன.

;